தென்னிந்திய சினிமாவில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் டிரைலர் – டிரெண்டிங்கிலும் நம்பர் 1

0
106

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், சமூக வலைதளங்களில் டிரெண்டாவதுடன், சாதனைகளையும் படைத்து வருகிறது.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தின் டிரைலரை நம்மாழ்வார் மறைவையொட்டி படக்குழு நேற்று வெளியிட்டது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சில நிமிடங்களிலேயே விஸ்வாசம் படத்தின் டிரைலர் சமூக வலைதளங்களை ஆட்கொண்டது.

தற்போது வரை யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. டிரைலரில் இடம்பெற்ற `பங்காளிங்களா அடிச்சு தூக்கலாமா’, `என் வாழ்க்கைல நான் வில்லன்டா’, `ஒத்தைக்கு ஒத்த வாடா’ உள்ளிட்ட வசனங்களும், ஆக்‌ஷன் காட்சிகளும் பொங்கல் விருந்தாக இருக்கும் என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விஸ்வாசம் படத்தின் டிரைலரை தற்போது வரை 1 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டுகளித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சுமார் 10 லட்சம் `லைக்ஸ்’ பெற்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமை விஸ்வாசம் படத்திற்கு கிடைத்துள்ளது.

தற்போது வரை 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிரைலரை லைக் செய்துள்ளனர்.

பேட்ட’ படத்தின் டிரைலர் 24 மணிநேரத்தில் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருந்த நிலையில், `விஸ்வாசம்’ டிரைலர் 9 மணிநேரத்திலே 1 கோடி பார்வையாளர்களை பெற்றுள்ளது.

படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடித்துள்ள பேட்ட படமும் அதே தேதியில் வெளியாக இருப்பதால் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.