நான் அப்பவே அடிச்சுருந்தா, எனக்கும் இதான் நடந்திருக்கும்! புகைப்படம் வெளியிட்ட சின்மயி!

0
323

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வந்தனர்.

அவரை தொடர்ந்து நடிகை சின்மயியும், திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.

மேலும் பலரும் அதனை இப்பொழுதே கூறியிருக்கலாமே அதை ஏன் 14 வருடம் கழித்து இப்பொழுது கூறவேண்டும் என கேள்விகள் எழுப்பினர்.

இவர்களின் இந்த கேள்விக்கு, அப்போது எனக்கு தைரியமில்லை, தனி பெண்ணாக நான் என்ன செய்ய முடியும் என்று பதிலளித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அதில் “ஏன் அப்பவே அடிக்கலன்னு கேட்ட நல் உள்ளங்களுக்கு” என்று பதிவிட்டுள்ளார்.

அதாவது டெல்லியை சேர்த்த ஒரு இளம் பெண் தன்னிடம், தவறாக நடந்து கொண்ட ஒருவரை தாக்கியுள்ளார். இதனால் அந்த ஆண், இந்த பெண்ணை திருப்பி அடித்த போது, அந்தப் பெண்ணின் கண் கருவிழிகள் பாதிப்படைந்துள்ளது.

இந்நிலையில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டவரை அப்போதே நானும் தாக்கி இருந்தால் இப்படித்தான் நடந்திருக்கும் என சின்மயி மறைமுகமாக கூறி இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*