லீக்கான பவர் ஸ்டாரின் ஆடியோ சகாக்களுடன் சீனிவாசன் பேசும் மிரள வைக்கும் ஆடியோ

0
111

எப்படிப்பட்ட மோசடி காரனையும் சினிமா என்ற மாய உலகம் ”ஹீரோவாக நல்லவனாக” காட்டி விடும் மக்களை நம்ப வைத்துவிடும் என்பதற்கு பவர் ஸ்டாரை விட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை என்பதை அம்பலமாக்கியுள்ளது தற்போது லீக்காகியுள்ள ஆடியோ ஒன்று.

கடந்த 5 ஆம் தேதி பவர் ஸ்டார் என்ற சீனிவாசன் கடத்தப்பட்டார் என ஊடகங்கள் பரபரப்பாக பேசியது. பின்னர் அவரது மனைவியும் கடத்தப்பட்டார் என புகார் அளிக்கப்பட்டது.

போலிசாரின் விசாரனையில் இது அனைத்தும் தன்னிடம் ஏமாந்தவரை சிக்க வைக்க சீனிவாசன் நடத்திய நாடகம் எனத் தெரியவந்தது.

ஊட்டியில் இருந்து திரும்பிய சீனிவாசன், தன்னை பெங்களுரை சேர்ந்த நபர் ஊட்டிக்கு கடத்தி தனது மனைவியின் சொத்தை எழுதி வாங்க முற்பட்டதாக புகார் அளித்தார்.

சீனிவாசனின் புகாரை நம்பி ஊட்டி சென்ற போலிசார் புகார் அளிக்கப்பட்ட நபரிவிடம் விசாரனை நடத்திய போது தான் சீனிவாசின் நடத்திய நாடம் அம்பலமானது.

பெங்களுரை சேர்ந்த தொழில் அதிபரிடம் 90 லட்சத்தை வாங்கி மோசடி செய்துள்ளார் சீனிவாசன்.

தொழில் அதிபர் பணத்தை திருப்பி கேட்க ஊட்டியில் எனக்கு ஒரு கோடி மதிப்பில் சொத்து உள்ளது அதை எழுதி கொடுக்கின்றேன் எனக் கூறி சீனிவாசன் தான் அந்த தொழில் அதிபரை ஊட்டிக்கு வர சொல்லியுள்ளார்.

சொத்து மனைவியின் பெயரில் உள்ளது எனக் கூறி மனைவியையும் ஊட்டிக்கு வர வைத்தது சீனிவாசன் தான்.

ஆனால் பணம் கேட்ட நபரை போலிசில் சிக்க வைக்க அப்படியே கதை திரைக் கதை வசனம் எழுதி போலி புகார் கொடுத்து நாடகமாடியுள்ளார் சீனிவாசன். இதை தெரிந்த போலிசார் சீனிவாசனை கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மேலும் அவர் மீது இதற்காக நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தனி கதை. ஆனால் தற்போது சீனிவாசன் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஊட்டியில் தனது சகாக்களுடன் பேசுவது போன்று ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த ஆடியோவை கேட்கும் அனைவரும் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். சினிமாவுல வரும் மோசடி கார வில்லன் மாறியே பேசுகின்றார் சீனிவாசன்.

”பணத்த பறி கொடுத்துட்டு போலிசுக்கு போவேன்னு சொல்லுவான் நீ போலிசுக்கு போன உன் காசு அவங்களுக்கு தான் போகும் ன்னு சொல்லி நாங்க மிரட்டுவோம்” என சீனிவாசன் பேசுவது போன்ற ஆடியோ அதில் இடம் பெற்றுள்ளது.

அதாவது பிரச்சன பன்னி போலிசுக்கு போன நீ கொடுத்த காச போலிசுக்கு லஞ்சமா கொடுத்து சரிகட்டிவிடுவோம் என்ற ஆர்த்தத்தில் அந்த ஆடியோ அமைந்துள்ளது,

மேலும் தனக்கு நடிகர் என்ற அடையாளம் இருப்பதால் வருபவர்கள் நம்பி விடுவார்கள் ஈசியா ஏமாத்தி விடலாம் என்ற பேச்சுக்களும் இதில் இடம் பெற்றுள்ளது.

சரி யாருக்காவது நீங்க ஒரு கோடி கடன் வாங்கிக் கொடுத்து இருக்கீங்களா என ஒருவர் கேட்க என்னை நம்பி ஒரு லட்சம் கூட தர மாட்டானுங்க நான் எப்படி ஒரு கோடி வாங்கி கொடுக்க என சிரித்தபடி சீனிவாசன் கூறுவது போன்ற ஆடியோவும் இதில் இடம் பெற்றுள்ளது.

கடன் வாங்க தருவதாக பலரை எப்படி மாற்றினேன் எப்படி ஏமாற்றுவோம் பிரச்சனைகளை எப்படி சமாளிப்போம் என்பதை சிரித்து மகிழ்ந்து தனது சகாக்களுடன் சீனிவாசன் பேசுவது போன்ற ஆடியோ உண்மையில் அனைவரையும் மிரள வைக்கின்றது.

இப்படிப்பட்ட ஒரு நபர் எப்படி சர்வசாதாரணமாக சுற்றி திரிகின்றார். சினிமா நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளராக வலம் வருகின்றார் என்பது பெரிய கேள்விக்குரியாகவே உள்ளது.

எப்படிப்பட்ட டுபாகூரையும் சினிமா என்ற மாய உலகம் நல்லவான காட்டி அவனுக்கு ரசிகர் மன்றம் வரை ஆரம்பிக்க வைத்து விடும் என்பதற்கு சீனிவாசன் ஒரு சிறந்த உதாரணமாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதியப்படுகின்றது.

காமடி நடிகன் என்ற போர்வையில் மிகப் பெரிய வில்லாக உள்ளார் சீனிவாசன்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.