பென்சன் பணத்திற்காக இறந்த தாயின் உடலுடன் ஒரு ஆண்டு வசித்து வந்த நபர் கைது

0
205
ஸ்பெயின் நாட்டில்,  தாயாரின் பென்சன் பணத்தை பெறுவதற்காக,  தாய் இறந்ததை மறைத்துவிட்டு, அவரது உடலை , யாருக்கும் தெரியாமல் ஒரு ஆண்டு காலமாக வீட்டிற்குள்ளேயே மறைத்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அந்த நபர் வசித்து வந்துள்ளார்.

அவருடைய வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் வீட்டுக்கு வந்து சோதனை நடத்திய போலீசாருக்கு, பேரதிர்ச்சி காத்திருந்தது.

உருக்குலைந்த  நிலையில், வயதான பெண்மணியின் உடல் கிடந்தது. இதையடுத்து, வீட்டில் வசித்து வந்த நபரை பிடித்துச்சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பென்சன் பணத்திற்காக தனது தாயாரின் மறைவு குறித்து யாரும் தெரிவிக்காமல், உடலை வீட்டிற்குள்ளேயே வைத்துக்கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, 92 வயதான அவரின் தாயர் மறைவு குறித்து தகவல் தெரிவிக்காத குற்றத்திற்காக போலீசார், அவரது மகனை பிடித்துச்சென்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.