மகள் திருமண விழா: டூயட் என்ற பெயரில் அம்பானி செய்த கூத்து.!- வீடியோ

0
863

முகேஷ் அம்பானி-நீட்டா தம்பதியின் மகள் இஷா அம்பானி. இவருக்கு பிரபல தொழில் அதிபர் ஆனந்த் பிரமாலுக்கும் வரும் 12ம் தேதி திருமணம் நடக்கின்றது.

கடந்த சில தினங்களாக திருமண நிகழ்ச்சிகள் திருவிழாவை போல கலைகட்டியுள்ளது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில், சங்கீத் என்ற நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை நடந்தது. அப்போது மகள் இஷா அம்பானியின் ஆசைக்கு இணங்க மனைவி நீட்டாவுடன் முகேஷ் அம்பானி டூயட் ஆடியது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

mukeshambanifamilly-ok-1537768979-1544420896

முகேஷ் அம்பானி குடும்பம்:
உலக கோடீஸ்வரர்களில் ஒருவராகவும், இந்திய கோடீஸ்வரர்களில் முதலிடத்திலும் இருப்பவர் முகேஷ் அம்பானி.

இவரது மனைவி நீட்டா. மகள் ஈஷா அம்பானி, ஆனந்த், ஆகாஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

ரிலையன்ஸ் என்ற தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் முகேஷ் அம்பானிக்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் இருக்கின்றன.

தந்தை இறந்த பிறகு அனிலுக்கும் முகேஷ்கும் தொழில்களில் பங்கு பிரிக்கப்பட்டன. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக டாப் பணக்கார்களில் பட்டியில் இடம் பிடித்துள்ளார் முகேஷ் அம்பானி.

காதலுக்கு பச்சை கொடி காட்டிய அம்பானி.!

மகள் இஷா அம்பானியும் பிரபல வைரத் தொழில் அதிபருமான ஆனந்த் பிரமால் ஆகியோர் காதல் விவகாரம் அம்பானிக்கு தெரியவர காதலுக்கு முதல் ஆளாக பச்சை கொடி காட்டினார்.

நிச்சயதார்த்த விழா: இதையடுத்து, இத்தாலியில் கடந்த செப்டம்பர் 21 முதல் 23 வரை மூன்று நாள் நிச்சயதார்த்த விழா நடந்தது.

இதற்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இதில், பாலிவுட் பிரபலங்கள் அமீர்கான், பிரியங்கா சோப்ரா, சோனம் கபூர் உள்ளிட்டோரும் ஹாலிவுட் பிரபலங்களான நிக்ஜோனஸ் மற்றும் ஜான்ஜென்ட் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

ambaniweding-3ok-1544420884
12ம் தேதி திருமணம்: இஷாஅம்பானி-ஆனந்த் பிரமாலுக்கும் திருமணம் வரும் 12ம் தேதி இந்தியாவில் திருமணம் நடக்கின்றது.

இரு வீட்டார் அழைப்புகளும் முடிந்து விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக திருவிழா போல நிகழ்ச்சி கலைகட்டியுள்ளது.

இதில் உலகத் அரசியல் வட்டார தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட் கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று வருகின்றனர்.

ambaniweding-1ok-1544420872
ஹிலாரி கிளின்டன் வருகை: அமெரிக்காவின் ஹிலாரி கிளின்டன் முதற்கொண்டு, திரையுலகம், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலரும் உதய்பூர் வந்திருந்தனர். பல பிரபலங்கள் தனி விமானத்தில் வந்தனர்.

8-ஆம் தேதி மட்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஆயிரத்து 7 விமானங்களை மும்பை விமான நிலையம் கையாண்டுள்ளது.

டூயட் டான்ஸ் ஆடிய முகேஷ்-நீட்டா: சனிக்கிழமையன்று நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியை கரன் ஜோஹர் தொகுத்து வழங்கினார்.

ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பிரபலங்களும் நடனமாடினர். மகளின் விருப்பத்தை நிறைவேற்ற முகேஷ் அம்பானி, தமது மனைவி நீதா அம்பானியுடன் ஜப் தக் ஹை ஜான் ((Jab Tak Hai Jaan ))பாடலுக்கு நடனமாடினார்.

ambaniweding-2ok-1544420878அசத்தல் நகைச்சுவை:

இதைத் தொடர்ந்து முகேஷ் ஜாக்சன் அம்பானி என பெயரை மாற்றிவிட்டதாக கரன் ஜோஹர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். இரண்டாவது நாளாக ஞாயிறன்றும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.

மேலும் அதிர வைக்கும் வீடியோக்கள்: நிகழ்ச்சியின் வீடியோக்கள் அதிரவிட்டன.

தெறிக்கவிட்ட டான்ஸ்: இதில் முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி ஆடிய டான்ஸ் தெறிக்கவிட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.