`நான் சொல்ற மெனுவை சமைச்சு கொடுக்கணும்’’ – சுஜாவிடம் சொன்ன கமல் !

0
121

பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பாப்புலரானவர் நடிகை சுஜா வருணி. இவர், சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த, நடிகர் சிவக்குமாருடன் தன்னுடைய மணவாழ்வைத் தொடங்கியிருக்கிறார்.

பிக் பாஸ் முதல் சீஸனில் அப்பா ஸ்தானத்தில் இருந்து தன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்று நடிகை சுஜா வருணி, கமலிடம் கேட்டதற்கு அவரும் ஓகே சொன்னார்.

ஆனால், சுஜா – சிவக்குமார் திருமணத்துக்கு கமல்ஹாசன் வரவில்லை. அதனால், தன் வீட்டுக்கு அழைத்து கல்யாண ஜோடிக்கு விருந்து கொடுத்து அசத்தியிருக்கிறார். இது குறித்து, நடிகை சுஜா வருணியிடம் கேட்டோம்.

`திருமணம் முடிந்து ஒரு சில நாளில் கமல் சாரிடமிருந்து போன் வந்தது. `திருமண வாழ்த்துகள் சுஜா. உங்க கல்யாணத்துக்கு வர முடியாமல் போயிடுச்சு.

‘இந்தியன் 2’ ஷூட்டிங் இருந்தது. எனக்கு வேலை வந்தா அதுக்குதான் முன்னுரிமை கொடுப்பேன். மத்தபடி எந்தக் காரணமும் இல்லை.

நீங்க ரெண்டு பேரும் எப்போவும் நல்ல புரிதலோடு சந்தோஷமா இருக்கணும். கண்டிப்பா ரெண்டு பேரும் விருந்துக்கு வரணும்’னு சொன்னார்.

நேத்து கமல் சாரை பார்க்கப்போனோம். அவரோட சேர்ந்து சாப்பிட்ட அந்த மொமன்ட் மேஜிக்கல் மொமன்ட்னுதான் சொல்லணும்.

நேரில் அவர்கிட்ட ஆசீர்வாதம் வாங்கினோம். நிறைய விஷயங்கள் ரொம்ப ஃப்ரண்ட்லியா பேசினார்.

நாங்க ரெண்டு பேரும் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள்னு நினைக்கிறேன். இது எல்லாத்துக்கும் காரணம், என் மாமியார் ஸ்ரீப்ரியா அவர்கள்தான்.

சாப்பிடும்போது கமல் சார், `சுஜா, இது நான் உங்களுக்குக் கொடுக்கிற விருந்து. நீங்க இன்னும் எனக்கு விருந்து கொடுக்கலையே?’னு கேட்டார்.

`அதுக்கு உங்களை அழைக்கதான் நாங்க வந்திருக்கோம் சார்’னு சொன்னேன். அதுக்கு கமல் சார், ‘நிச்சயமா நான் வருவேன்.

நான் கொடுக்கிற மெனுவை சமைச்சு தரணும்’னு சொன்னார். கமல் சார்கூட இருந்த நேரம் பொன்னான நேரம்னுதான் சொல்லணும்” என்று புன்னகைத்தார் சுஜா வருணி

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.