காதலுக்கு வயது தேவையில்லை; 61 வயது மூதாட்டி மீது காதலில் விழுந்த இளைஞன்…!

0
159

கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயது மூதாட்டியை காதலித்து வருகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய சூழலில் அதிர்ச்சியூட்டும் செய்திகளுக்கு பஞ்சமில்லை என்பது ஒருபுறமிருக்க அதில் இதுவும் ஒன்று.

உலகளவில் காதலுக்கு கண்ணில்லை எனப்படும் கூற்று அதிகமான இடங்களில் உண்மையானதாகவே இருந்து வருகிறது.

அந்த வரிசையில் அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்வில் இதுபோன்று விநோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுகின்றனர்.

அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடி தான், கைல் ஜோன்ஸ் (31) – மார்ஜோரி மெக்குல் (91) என்பவர்கள்.

625.0.560.350.160.300.053.800.668.160.90இருவருக்கும் இடையே 60 வயது வித்தியாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.

இதுபற்றி ஜோன்ஸ் பேசுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று உறவு கொண்டுள்ளேன்.

ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில், ஜோன்ஸ் என்னை காதலிப்பதாக கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும், அவனை மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.