இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள்! – அஜித் பெயர் மிஸ்ஸிங்

0
678

நம்மில் பலருக்கு நமக்குப் பிடித்த நடிகர் நடிகை எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருக்கும்.

ரஜினிகாந்த், விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டவர்களின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். கடந்த ஆண்டு அதிக சம்பளம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலில் மேற்சொன்னவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

salman_18234சல்மான் கான்

ஒவ்வோர் ஆண்டும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் பல்வேறு துறைகளில் சாதித்த, அதிகம் சம்பாதித்த பிரபலங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வரிசையில் ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் இந்த ஆண்டு (2018) அதிகம் சம்பாதித்த இந்திய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடத்தில் உள்ளார்.

no_5_17243_19485ரஜினி

இந்த ஆண்டு இவர் ரூ.253 கோடி சம்பாதித்துள்ளார். ரூ.228 கோடி ரூபாய் சம்பாதித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.185 கோடி சம்பாதித்து மூன்றாம் இடத்தில் உள்ளார். தீபிகா படுகோனே நான்காவது இடத்திலும், தோனி ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் 14-வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் ரூ.50 கோடி.

vijay_18106விஜய்

நடிகர் விஜய் 26-வது இடத்தில் இருக்கிறார். அவரின் ஆண்டு வருமானம் ரூ.30.33 கோடி.

vikram_18283விக்ரம்

நடிகர் விக்ரம் ரூ.26 கோடி சம்பாதித்து 29-வது இடத்தில் உள்ளார்.

collage_18089விஜய்சேதுபதி

நடிகர் சூர்யாவும் விஜய் சேதுபதியும் 34-வது இடத்தில் உள்ளனர். இவர்கள் இருவரின் ஆண்டு வருமானம் ரூ.23.67 கோடி. நடிகர் தனுஷ் ரூ.17.25 கோடி ஆண்டு வருமானத்துடன் 53-வது இடத்தில் உள்ளார்.

nayanthara_18415நயந்தாரா

இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே தமிழ் நடிகை நயன்தாரா. அவரின் ஆண்டு வருமானம் ரூ.15.17 கோடி. பட்டியலில் பிடித்திருக்கும் இடம் 69.

இந்தப் பட்டியலில் நடிகர் அஜித்தின் பெயர் இடம்பெறவில்லை. ஆக, ரஜினி, விஜய், விக்ரம், சூர்யா, விஜய்சேதுபதி ஆகியவர்கள்தாம் அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 தமிழ் நடிகர்கள்.

ஃபோர்ப்ஸ் பட்டியலில் கடந்த சில வருடங்களாகவே தென்னிந்திய நடிகர்களின் பெயர்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.

ஆனாலும் முதல் ஐந்து இடங்களை எப்படியாவது பாலிவுட் நடிகர்கள் பிடித்துவிடுவார்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.