அஷ்ட பைரவர்கள்

0
165

ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர். இவரை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

ஆதி மகா பைரவர் தோன்றியபோது, அவரது கோப அக்னியில் இருந்து அஷ்ட பைரவர்கள் தோன்றினர்.

அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் என்னும் அந்த அஷ்ட பைரவர்களுக்கும், பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்னும் அஷ்ட மாதர்கள் துணைகளாக உள்ளனர்.

அஷ்ட பைரவர்களுக்கும் அன்னம், ரிஷபம், மயில், கருடன், குதிரை, யானை, சிம்மம், நாய் என்னும் எட்டு வாகனங்கள் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த எட்டு பைரவர்களும் எண்திசைகளில் இருந்து எட்டுவிதமான கடமைகளை செய்த படியால், அறுபத்து நான்கு பைரவர்களாக உருப்பெற்றனர். திருவண்ணாமலை ஆலயத்தில் உள்ள கால பைரவரின் மண்டபத்தில், எட்டு பைரவர்களின் சுதைச் சிற்பங்களை தரிசிக்கலாம்.

சீர்காழி சட்டநாதர் ஆலய தெற்கு பிராகாரத்தில் உள்ள வலம்புரி மண்டபத்தில் அஷ்ட பைரவர்கள் வீற்றிருப்பார்கள்.

அஷ்ட பைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்கள் கொண்ட கோவில் காஞ்சீபுரம் அருகிலுள்ள பிள்ளையார்பாளையம் என்ற இடத்தில் உள்ளது.

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள வடுவூர் சிவன் கோவிலில் எட்டு வடிவங்களில் உள்ள பைரவர்களைக் காணலாம்.

இதேபோல் அறுபத்து நான்கு பைரவர்களுக்கும் தனித்தனி பெயர் உள்ளது. இவர்கள் அனைவரின் திருவுருவங்களும், கங்கை நதிக்கரையில் உள்ள ஒரு ஆலயத்தில் காணப்படுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.