நான் எந்த சாதின்னு உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா: ரித்விகா

0
233

சென்னை: கூகுளில் தனது சாதியை தேடியவர்களுக்கு பதில் அளித்துள்ளார் ரித்விகா. பரதேசி படம் மூலம் நடிகையானவர் ரித்விகா.

வளர்ந்து வரும் நடிகையான அவர் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். பிக் பாஸ் 2 டைட்டிலை வென்றார்.

இந்நிலையில் பலரும் ரித்விகாவின் சாதியை தெரிந்து கொள்ள கூகுள் செய்துள்ளனர்.
ரித்விகாவின் சாதியை பலர் கூகுளில் தேடியுள்ளனர். அதில் சிலர் Rithvika caste in tamil என்று போட்டு கூகுள் செய்துள்ளனர்.

ரித்விகா ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு பிக் பாஸ் 2 டைட்டில் கிடைத்ததாகவும் பேச்சு கிளம்பியுள்ளது.

இது ரித்விகாவுக்கு தெரிய வரவே அவர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

ரித்விகா எந்த சாதி என்று தேடுபவர்களுக்கு.. நான் குறிப்பிட்ட ஒரு சாதியை சேர்ந்தவள் என்பதால் பிக் பாஸில் வின்னர் ஆனேன் என்று விமர்சிப்பவர்களுக்கு.. நான் அந்த சாதியும் இல்லை, இந்த சாதியும் இல்லை.

நான் எந்த சாதி என்று உங்கள் சாதி சாக்கடையில் தேடி கண்டுபுடிச்சுக்கோங்கடா.. என்று ட்வீட் செய்துள்ளார் ரித்விகா
ரித்விகாவின் ட்வீட்டை பார்த்த நெட்டிசன்ஸ் நீ ஏம்மா இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்துகிட்டு இருக்க, போய் வேலையை பாரு என்று தெரிவித்துள்ளனர்.

சிலர் பாராட்டியுள்ளனர். மேலும் சிலரோ, பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது தமிழ் பொண்ணு என்றீர்கள் தற்போது சாதி பற்றி பேசுகிறீர்கள், ஏன் இந்த வேண்டாத வேலை என்று கேட்டுள்ளனர்.
பிக் பாஸ் முதல் சீசனில் ஆரவ் டைட்டிலை வென்றபோது அவர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர் என்பதால் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் ரித்விகா விஷயத்தில் அவர் குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர் என்பதால் டைட்டில் கொடுக்கப்பட்டது என்று பேசுகிறார்கள். ஆக மொத்தம் டைட்டிலை வென்றால் சாதி, மதம் குறித்த பேச்சு எழுகிறது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.