இந்த வாரப் (நவம்பர் 30 – டிசம்பர் 6) பலன்கள்: உங்கள் ராசிக்கு எத்தகைய மாற்றத்தைத் தரப்போகிறது?

0
303

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (நவம்பர் 30 – டிசம்பர் 6) பலன்களை ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தவிர்க்கமுடியாத செலவுகள் உண்டானாலும் அவையாவும் சுபச் செலவுகளாகி மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விடாமுயற்சிகள் வெற்றியாக மாறும். வேலைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறலாம். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படும். கால்நடைகளாலும் வருமானம் ஒன்றும் பெரிதாக வராது.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் பெரிதாக எதிர்பார்த்த அளவுக்கு இராது. தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினர் நற்பெயர் கிடைத்துப் புகழடைவார்கள். பெண்மணிகளுக்கு வீட்டில் சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புள்ளது. பொருள்வரவு சுமாராக இருக்கும்.

உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெற கடுமையாக உழைத்து, பாடங்களை மனதிலிருத்தி படிக்கவும்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும் தாயாரையும் வணங்கி நலம் பெறவும்.

அனுகூலமான தினங்கள்: 30, 1.

சந்திராஷ்டமம்: 6.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

தந்தை வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தோர் அன்புக்கரம் நீட்டுவார்கள். எதையும் சாதிக்கும் வல்லமையை பெறுவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்தவும். சக ஊழியர்களை அனுசரித்து நடக்கவும்.

வியாபாரிகள் தீர ஆலோசித்து வியாபாரம் செய்யவும். முதலீடுகளினால் பயன் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு லாபங்கள் அதிகரிக்கும். மகசூல் அதிகமாகும். தானியங்களால் வருமானம் கூடும்.

அரசியல்வாதிகள் மேலிட ஆதரவைப் பெறுவார்கள். ஆனாலும் தொண்டர்கள் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வர்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். வேலைகளைச் சுலபமாகச் செய்து பாராட்டுகள் பெறுவீர்கள். பெண்மணிகள் இல்லத்தில் சுப நிகழ்வுகளால் சந்தோஷமடைவார்கள்.  உறவினர்கள், குழந்தைகளுடன் காலங்களை மகிழ்ச்சியுடன் கழிப்பீர்கள். 

மாணவமணிகள் விளையாட்டில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: அம்மனை தரிசனம் செய்து நலம் பெறவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 2.

சந்திராஷ்டமம்: இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

வரவுக்கேற்றவாறு செலவுகளும் செய்ய நேரிடும். வழக்குகளில் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது.

குடும்பத்தினரிடம் பாசம் அதிகரிக்கும். தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உடன்பிறந்தோர் மூலம் நன்மைகள் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் குறை காண காத்திருக்கும் மேலதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள்.

உழைப்பிற்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைபொருள்களை விற்பனை செய்து லாபம் பெறுவர்.

அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும் தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையாகவும் பாசமாகவும் பழகுவார்கள். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் உண்டாகும். இதனால் சற்று மன அமைதி சற்றுக் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். 

பரிகாரம்: நவக்கிரகங்களை பிரதட்சணம் செய்யவும். 

அனுகூலமான தினங்கள்: 30, 3. 

சந்திராஷ்டமம்: இல்லை.

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

சந்தோஷமான தகவல்கள் தேடி வரும். உறுதியுடன் செயல்பட்டு திட்டமிட்ட வேலைகளில் வெற்றி பெறுவீர்கள். வாக்குகொடுப்பதையோ முன் ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். பயணங்களால் நன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுலவக வேலைகள் சுமுகமாக முடியும். வருமானம் மனதிற்குத் திருப்திகரமாக அமையும்.

வியாபாரிகளுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். விற்பனை அதிகரிக்கும். புதிய முதலீடு செய்து உங்கள் கடையை விரிவுபடுத்தலாம். விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கும். புதிய குத்தகைகளை துணிந்து எடுக்கலாம்.

அரசியல்வாதிள் உட்கட்சிப் பூசலுக்கு வாய்ப்புள்ளதால் கட்சித் தலைமையிடம் கவனமாக இருக்கவும். நண்பர்கள்போல் பழகும் எதிரிகளிடம் உஷாராக இருக்கவும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் மதிப்பு உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிய தேக்கநிலை உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு சிறப்புடன் வாழுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 2, 3.

சந்திராஷ்டமம்: இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். செயல்கள் அனைத்தும் தடைகளைத் தாண்டி வெற்றி பெறும்.

சிலருக்கு வாகன யோகம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் உதவி செய்ய முன்வர மாட்டார்கள். மதிப்பு மரியாதை நன்றாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைப் பதற்றப்படாமல் செய்வார்கள். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாகவே இருப்பார்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த சிரமங்கள் குறையும். தற்சமயம் வியாபாரத்தைப் பெருக்கும் நினைப்பை தள்ளி வைக்கவும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். புதிய பதவிகள் தேடிவரும். பணவரவு இருக்கும்.

பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போகும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். தீர ஆலோசித்தப்பிறகே செயல்களில் இறங்கவும். மாணவமணிகள் படிப்பில் உற்சாகமான மனநிலையுடன் ஈடுபவார்கள்.  

பரிகாரம்: செய்வாயன்று துர்க்கையை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 30, 4. 

சந்திராஷ்டமம்:இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்லவும். உற்றார் உறவினர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவர். எண்ணங்கள் செயல் வடிவம் பெற்று வெற்றிகளைக் கொடுக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

சக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் இருந்த இடையூறுகள் குறையும்.

இருப்பினும் கடையை வரிவுபடுத்தும் எண்ணத்தை ஒத்திவைக்கவும். விவசாயிகள் பிற்காலத் திட்டங்களுக்கு சற்று செலவு செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் தெரிவித்துவிட்டு அமைதி காக்கவும். கலைத்துறையினர் அனைத்து வேலைகளையும் நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். 

பெண்மணிகள் பிடிவாதக்குணத்தைத் தளர்த்தினால் மற்றவர்களின் வெறுப்பிலிருந்து விடுபடலாம்.  மாணவமணிகள் செய்யும் சிறு முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 2, 4.

சந்திராஷ்டமம்:இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

பொறுமையுடன் செயல்பட வேண்டும். திட்டமிட்ட வேலைகளில் இடையூறுகள் தோன்றி மறையும்.

கடன்களைத் திரும்பப் பெற கடினமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிவரும். கேட்கும் செய்திகள் சோர்வைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளில் கவனம் செலுத்துவார்கள். வேலைப்பளு கூடும்.

பணவரவு சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு அரசாங்கத்தால் சில அனுகூலங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாகவே முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும்.  இதனால் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

தொண்டர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு பெற முடியாது. கலைத்துறையினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள்.

ரசிகர்களின் ஆசையைப் பூர்த்தி செய்வார்கள். பெண்மணிகளுக்கு தங்கள் கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் கல்வியில் கடினமாக உழைக்க வேண்டி வரும்.  

பரிகாரம்: விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 4

சந்திராஷ்டமம்:இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் ஒரு தொய்வு ஏற்படும். வாகனங்களால் செலவுகள் உருவாகும்.

உடல் நோய் மற்றும் உற்சாகக் குறைவு இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் தென்படும். புனிதப் பயணங்கள் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாக சக ஊழியர்களே நடந்துகொள்வார்கள். மேலதிகாரிகளின் நடவடிக்கைகளும் சாதகமாக இராது.

வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சுமுகமான சூழல் தென்படும். லாபத்தால்  மனம் திருப்தி அடையும். விவசாயிகளுக்கு கொள்முதலில் லாபம் பெருகும். சுபச் செலவுகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். எச்சரிக்கையுடன் பணியாற்றவும்.

கலைத்துறையினர் ஒப்பந்தங்களை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும்  பணவரவு தாமதமாகும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் இணக்கமாகப் பழகுவீர்கள்.  மாணவமணிகள் படிப்பில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

பரிகாரம்: செந்திலாண்டவரை வணங்கிவர, நன்மைகள் கூடும்.

அனுகூலமான தினங்கள்: 2, 5.

சந்திராஷ்டமம்:இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் இருந்து வந்த குளறுபடிகள் குறையும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும்.

சட்டத்துறையை சார்ந்தவர்கள் சற்று கவனத்துடன் செயலாற்ற வேண்டி வரும். நெருங்கிய உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிக்க கவனத்துடன் செய்து முடிப்பர். சக ஊழியர்களை நம்பி எதையும் ஒப்படைக்க வேண்டாம்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். புதிய யுக்திகளையும் முயற்சிகளையும் மேற்கொண்டு வியாபாரத்தைப் பெருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும்.  கடன்களை அடைக்க முயல்வீர்கள்.

அரசியல்வாதிகள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு வருமானம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள்.

பெண்மணிகள் கணவரிடம் எதிர்பார்த்த அன்பைப் பெறுவார்கள். உறவினர்களிடமும் மற்றவர்களிடமும் மனம்திறந்து பேச வேண்டாம். மாணவமணிகள் சுறுசுறுப்பாக படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறுவர்.

பரிகாரம்: சிவபெருமானையும் சனிபகவானையும் வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 3, 5. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட வேலைகளில் எந்தத் தடையுமின்றி ஈடுபடுவீர்கள்.

குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.  பூர்வீகச் சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். வீண் விரயங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சிறிது சிரமம் ஏற்படும். கூட்டாளிகளால் சில நன்மைகளைப் பெறுவீர்கள்.   விவசாயிகள் உற்பத்திப் பொருள்களால் நன்கு பயனடைவீர்கள். கால்நடைகள் மூலம்  பலனுண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். திட்டமிட்ட வேலைகளில் தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியடைவீர்கள்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த வரவேற்புகளைப் பெறுவீர்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் அடைவர். பெண்மணிகளுக்கு கணவருடனான  இணக்கம் கூடும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பொறுப்புடன் பாடங்களைப் படிக்கவும்.

பரிகாரம்: ஞாயிறன்று சூரியபகவானை வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 1, 5.

சந்திராஷ்டமம்:30.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த வேலைகள் யாவும் எந்த இடையூறுமின்றி முடியும். உறுதியான எண்ணங்களுடன் பெரிய வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பச் சூழ்நிலைகளில் மாற்றங்கள் தென்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக முடிப்பார்கள். செல்வாக்கும் படிப்படியாக உயரும்.

சிலர் விரும்பிய இடமாற்றம் கிடைப்பதென்பது அரிதாகும். விவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராகத் தான் இருக்கும். உடன் உழைப்பவர்களை அரவணைத்துச் செல்லவும். 

அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது கடினம். இதனால் பதவி என்பதும் சிரமமே.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த ஒப்பந்தங்களைப் பெறமாட்டார்கள். ரசிகர்களின் ஆதரவும் சுமாராகத்தான் இருக்கும். 

பெண்மணிகள் கணவரை அனுசரித்துச் செல்லவும். வீண் சில்லறைச் செலவுகள் கூடும். மாணவமணிகளுக்கு தோல்நோய்கள் அறிகுறிகள் தோன்றி பின் குணமாகிவிடும். ஆனாலும் உற்சாகத்துடன் படிப்பில் ஈடுபட்டு நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று முருகப்பெருமானைவழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 4, 5.

சந்திராஷ்டமம்:  1, 2, 3.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நினைத்த வேலைகள் யாவும் எவ்வித இடையூறுகளுமின்றி எளிதாக முடியும். உறுதியான எண்ணங்களுடன் பெரும் வெற்றிகளைக் காண்பீர்கள். கடந்த காலத்தில் நிலவிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து மாறிய சூழல் உருவாகும்.

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் சந்தோஷமாக முடிப்பார்கள். வருமானமும் உயரும்.

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் எந்தக் குறைவும் ஏற்படாது. எவருடனும் கூட்டுவியாபாரம் செய்யலாகாது. விவசாயிகள் சுமாரான மகசூலைக் காண்பார்கள். வருமானம் மிதமாகவே இருக்கும். கால்நடைகளால் லாபம் மிகுந்து காணப்படும்.

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்தி வைக்கவும். தீவிர ஆலோசனைகளுக்கு பிறகே எடுக்கவும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகளுக்கு  படிப்பில் அனுகூலமான காலமிது. ஆசிரியர்களின் ஆதரவு மேலும் கூடும்.

பரிகாரம்: வெள்ளியன்று மஹாலட்சுமிக்கு தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 3, 6.

சந்திராஷ்டமம்: 4,5

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.