படியில் பயணம்.. நொடியில் மரணம்.. திருப்பூரில் பயங்கரம்.. பரிதாபமாக இறந்த சின்னச்சாமி! -(வீடியோ)

0
235
திருப்பூர்: பஸ் படிக்கட்டில் தொங்கி கொண்டேதான் வந்தார்.. திடீரென தவறி விழுந்து எல்லார் கண்முன்னாடியே பலியானார் சின்னசாமி!

பஸ் படிக்கட்டில் தொங்க வேண்டாம் என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா கண்டக்டர்கள், டிரைவர்களும் சொல்லி கொண்டேதான் இருக்கின்றனர்.
ஆனாலும் படிக்கட்டில் பயணம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. முக்கியமாக இந்த சேட்டையை செய்வது கல்லூரி பிள்ளைகள்தான்.

எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை. ஹீரோயிசம் காட்டுகிறேன் என்று எப்பவுமே அடாவடித்தனம்தான்!!

bus0242d4-1543320054ஆனால் எதிர்பாராத விதமாக பஸ்களில் கூட்டம் அதிகரித்தால் வயது வித்தியாசம் பாராமல் படிக்கட்டில் தொங்க ஆரம்பித்து விடுகிறார்கள்.
இப்படித்தான் இன்றைக்கு திருப்பூர் மாவட்டத்திலும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. துத்தாரிபாளையம் பகுதியில் இருந்து ஒரு பஸ் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

சரஸ்வதி பஸ் என்று அதற்கு பெயர். நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பஸ்சில் இருந்திருப்பார்கள். அவ்வளவு கூட்டம்!!

அதனால் படிக்கட்டில் தொங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. சின்னசாமி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபரும் படிக்கட்டில் தொங்கி கொண்டே வந்தார்.

அப்போது சாலையில் இருந்த ஸ்பீட் பிரேக்கை டிரைவர் கண்டுகொள்ளவே இல்லை. எவ்வளவு வேகத்தில் வந்தாரோ, அதே வேகத்தில் பஸ்ஸை அந்த ஸ்பீட் பிரேக் மீது ஏற்றி இறக்கினார்.

இதனால் பஸ் ஆட்டம் கண்டது. தொங்கி கொண்டிருந்த சின்னசாமி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
இதில் அவருக்கு தலையில் பலத்த அடி விழுந்து ரத்தம் கொட்டிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பதற வைக்கும் இந்தக் காட்சிகள் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

உடனடியாக காமநாயக்கன்பாளையம் போலீசார் இது சம்பந்தமாக விசாரணையை ஆரம்பித்துள்ளனர். முதலில் பஸ்சை பறிமுதல் செய்தனர்.

மேலும் டிரைவர், கண்டக்டரை பிடித்து விசாரித்து வருகின்றனர். பொதுவாகவே பிரைவேட் பஸ்கள் பெரும்பாலும் இப்படித்தான் ஓவர் ஸ்பீடில்தான் ஓட்டப்படுகிறது. மற்றொன்று பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது.

இதனால் இருக்கும் பஸ்ஸை பிடித்து ஊர் போய் சேர வேண்டும் என்றே எல்லாரும் முண்டியடித்து ஏறுகிறார்கள்.
எனவே பேருந்தை அதிகப்படுத்தி, போக்குவரத்து விதிகளை மதிக்கும், கடைப்பிடிக்கும் டிரைவர்களை நியமித்து பொதுமக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வலுக்க தொடங்கி உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.