கத்தி குத்திற்கு இலக்கான இளைஞர் பலி!

0
365

கொழும்பில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

DSC00846

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த 21 வயதான குமார் டிக்ஷனின் சடலம் இன்று அதிகாலை 4 மணியளவில் திம்புள்ள தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

DSC00859

கொழும்பில் பழக்கடை ஒன்றில் பணி புரிந்து வந்த நிலையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியதையடுத்து, இவர் கூரிய ஆயுதங்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

DSC00856

குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் பணி புரியும் மலையக இளைஞர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும், இவ்வாறானதொரு சம்பவம் இனிமேல் மலையக இளைஞர்களுக்கு ஏற்படக்கூடாது என திம்புள்ள கீழ்பிரிவு தோட்ட மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

DSC00848

உயிரிழந்த குறித்த இளைஞன் தனது வீட்டின் மூன்றாவது பிள்ளை எனவும், இவரின் தந்தை சமீபத்தில் காலமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

DSC00854

இவ்வாறு உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் நாளை மதியம் திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெறவுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்னர்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.