சுதந்திர தமிழீழம் மலரப்போகிறது!! வைகோ சபதம், ஐ.நா. பொதுசபை கூடுகிறது! பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு!!(நம்புங்கள்.. நம்புங்கள்)

0
338

தஞ்சாவூர்: தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்வேன் என மாவீரர்கள் தினத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சபதம் எடுத்துள்ளார்.


கஜா புயல் பாதித்த பகுதிகளை வைகோ இன்று பார்வையிட்டார். அப்போது தஞ்சாவூரில் உள்ள மல்லிப்பட்டினம் கடற்கரைக்கு சென்றார். அங்கு கடலில் நின்று சபதம் ஏற்றார்.

அப்போது அவர் கூறுகையில் நான் என்ன செய்யபோகிறேன் என்றால் பொது வாக்கெடுப்பை நடத்த ஏற்பாடு செய்வேன்.

இலங்கை ராணுவம், இலங்கை சிங்கள குடியிருப்புகளை வெளியேற்றிவிட்டு பொது வாக்கெடுப்பு நடக்கும்.

சுதந்திர தமிழீழம் அமையும், அப்போது திரும்பவும் இந்த கடல் தண்ணீரில் வந்து சத்தியம் செய்து விட்டு செல்வேன் என்றார் வைகோ.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளின் தினம் மாவீரர்கள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் வைகோ சபதமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர தமிழீழம் அமையும், அப்போது திரும்பவும் இந்த கடல் தண்ணீரில் வந்து சத்தியம் செய்து விட்டு செல்வேன் என்றார் வைகோ. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர் துறந்த தியாகிகளின் தினம் மாவீரர்கள் தினமாக ஆண்டுதோறும் நவம்பர் 27-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் வைகோ சபதமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

• இந்த கோமாளி வைகோ எதைச்சொன்னாலும், அதை கேட்டு நம்பும் மந்த கூட்டமொன்று வெளிநாடுகளில் இருக்கத்தான்  செய்கிறது.

ஐ.நா. பொதுசபை என்ன மதிமுகவின்    தலைமைக் கழக அலுவலகமான  தாயகமா??

• எவ்வளவு காலத்துக்குதான் இப்படிகதைகள் சொல்லி உசுப்பேத்தி ஈழத்தமிழர்களை  ஏமாற்றப்போகிறார்கள்??

கேட்கிறவன் கேணையன் என்றால் எருதுவும் ஏறோ பிளேன் ஓட்டுமாம் என்ற கதை போல் அல்லவா இருக்கிறது இவர்களின் பேச்சு.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.