நியூசிலாந்து கடற்கரையில் ஒரே நாளில் 145 திமிங்கலங்கள் மரணம்- அதிர்ச்சியில் இயற்கை ஆர்வலர்கள்

0
228

நியூசிலாந்தில் உள்ள தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) இறந்து கிடந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நியூசிலாந்தில் உள்ள ஸ்டீவர்ட் தீவின் ஆள்நடமாட்டமில்லாத மேசன் பே என்ற கடற்கரைப் பகுதியில், ஹைக்கர் (Hiker) ஒருவர் கடந்த சனிக்கிழமை மதியம் ஹைக்கிங் சென்றுள்ளார்.

அப்போது, பைலட் திமிங்கல வகையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், அங்கிருந்து சுமார் 2 முதல் 3 மணிநேரம் நடந்து சென்று, அந்த ஹைக்கர் நியூசிலாந்து பொதுப்பணித் துறையினரிடம் இந்த சம்பவத்தைப் பற்றித் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, அங்கு வந்த அதிகாரிகள் ஏற்கனவே பாதிக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டதை அறிந்து மிகவும் சோகமடைந்தனர்.

மேலும், மீதமிருந்த திமிங்கலங்கள் மீது மணல் பரவி இருந்தாலும், வானிலை மோசமாக இருந்தாலும், அவற்றை அரைகுறை உயிரோடு மணலை மூடி புதைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இந்த சோகமான சம்பவத்தில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திமிங்கலங்கள் எதற்காக இப்படி கரை ஒதுங்குகின்றன என்பதற்கான உறுதியான காரணம் தெரியவில்லை என்ற போதும், இரையை பின்தொடர்ந்து செல்லும்போது, மற்ற பெரிய மீன்களிடமிருந்து தப்பும்போது அல்லது குழுவில் உடல்நிலை சரியில்லாத திமிங்கலத்தைப் பாதுக்காக்க முயற்சிக்கும்போது பாதை மாறி கரை ஒதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒருபுறம் கூறப்பட்டாலும், உண்மையான காரணம் என்ன என்பதை தொடர்ந்து இயற்கை ஆர்வலர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு இதே பகுதியில் சுமார் 250 பைலட் திமிங்கலங்கள் உயிரிழந்து கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.