கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு அஞ்சலி! – (படங்கள்)

0
253

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடியதோழர்கள் வந்துள்ளோம்.

எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்.ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்.

என்ற துயிலுமில்லம் பாடல் ஒலிக்க ஆயிரக்கணக்கான உறவுகளின் கண்ணீரில் நனைந்தது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 2018 மாவீரர் நாள் ஆயிக்கணக்கான பொது மக்கள் ஒன்று கூடி உணர்வெழுச்சியுடன் கண்ணீர் மல்க நடந்து முடிந்த விடுதலைப்போராட்டத்தில் மரணித்த தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

பிற்பகல் மூன்று மணி முதல் மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பொது மக்கள் கனகபுரம் துயிலுமில்லம் நோக்கி வருகைதர தொடங்கினார்கள்.

ஒவ்வொருவரும் அங்குள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சுடர்களுக்கு முன்னாள் அமைதியாக நின்றிருக்க மாலை 6.05மணிக்கு மணியோசை எழுப்பட்டு தொடர்ந்து பொதுச் சுடரை லெப் கேணல் கில்மன் , பிரிகேடியர் தீபன் ஆகியே மாவீரர்களின் தந்தையான வேலாயுதபிள்ளை அவர்கள் ஏற்றி வைக்க தொடர்ந்து ஏனைய சுடர்களும் ஏற்றி வகைப்பட்டது.

அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடலும் ஒலிபரப்பட்டது. இதன் கலந்துகொண்ட உறவுகள் கண்ணீர் மலக்க உணர்வெழுச்சியுடன் தங்களின் உறவுகளை நினைவு கூர்ந்தனர்.

மிகவும் அமைதியாக எவ்வித நெருக்கடிகளும் இன்றி 2018 மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெற்று முடிந்து .

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முதல் முதல் மரணித்த மாவீரான லெப். சங்கர்( சத்தியநாதன்) நினைவாக நவம்பர் 27 திகதியை விடுதலைப்புலிகள் மாவீரர் நாளாக 1989 ஆம் ஆண்டு பிரகடனம் செய்தனர்.

அன்று முதல் நவம்பர் 27 தாயகத்திலும் புலம் பெயர் தேசத்தில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.


IMG_6825kili1kili3kili10kili11kili112kilikinochchi maveerarkinochchiIMG_6898IMG_6905IMG_6910IMG_6930IMG_6797

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.