பெண் போல அலங்காரம் செய்துக் கொண்டு செக்ஸில் ஈடுபட அழைக்கும் கணவன்!! ( My Story -1)

0
1859

எனக்கும் அவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்கு மூன்று மகன், ஒரு மகள். அனைவரும் பத்தில் இருந்து மூன்று வயதுக்குட்பட்டவர்கள்.

என் கணவர் மிகவும், அன்பானவர், அக்கறையானவர். அவர் ஒருபோதும் எங்கள் மீது மிகுதியாக கோபம் காட்டியதே இல்லை.

வேலையில் கூடுதலான ஸ்ட்ரெஸ் இருந்தாலுமே கூட, அவர் வீட்டில் அதை வெளிப்படுத்த மாட்டார்.

என் கணவரின் வேலை பளுவை பார்த்துவிட்டு, அவர் வீட்டில் நடந்துக் கொள்வதை கண்டால், நிச்சயம் இப்படி ஒரு கணவர் வாய்ப்பது மிக அரிதான செயல் என்று தான் ஊரார் மெச்சுவார்கள்.

அவரை பகலிலும், சமூகத்தில் ஒருவராக காணும் வரையில் மட்டும் தான் இப்படியான பேச்சு வாயில் இருந்து வரும்.
1-1542865450
இரவிலும், யாரும் இல்லாத போது தனிமையில் அவர் நடந்துக் கொள்வதைப் பார்த்தால், நிஜமாகவே இவர் ஆண் தானா, அல்ல ஓரினச்சேர்க்கையாளர் அல்லது ட்ரான்ஸ் நபரா என்ற சந்தேகம் எழும்.

ஆனால், என் கணவர் ஓரினச் சேர்கையாளரோ, ட்ரான்ஸ் நபரோ அல்ல. அவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர்.

அதாவது, தனது எதிர் பாலினத்தவரை போல, அவர்கள் உடுத்தும் ஆடை அலங்காரத்தின் மீது பேரார்வம் கொண்டு. அவர்களை போல தங்களை சில சமயம் உருவகப்படுத்திப் பார்த்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்

2-1542865457
எனக்கு இப்போது வயது 37. என் கணவரின் வயது 40. எங்கள் இருவருக்கும் திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது.

எங்கள் மூத்த மகனுக்கு 10 வயதாகிறது. கடைக்குட்டி பையன் பிறந்து 3 ஆண்டுகள் ஆகிறது.

மேலும், 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

எங்கள் திருமண வாழ்க்கை ஆரம்பக் கட்டத்தில் மட்டுமின்றி இப்போதும் சுபமாக தான் போய் கொண்டிருக்கிறதே, ஆனால், ஒரே ஒரு சிக்கலுடன்.

நான் இரண்டாவது முறை கருத்தரித்த பிறகு தான், என் கணவர் ஒரு கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று அறிந்துக் கொண்டேன்.

4-1542865475ஆரம்பத்தில் எனக்கும் அவர் ஆண்தானா? அல்லது ஓரினச்சேர்க்கை, ட்ரான்ஸ் போன்றவரா? என்ற சந்தேகம் எழுந்தது.

பிறகு, அவர் அளித்த விளக்கம் மற்றும், இன்டர்நெட்டில் நான் இதுக்குறித்து தேடித் படித்த பிறகு தான், அவரிடும் இருக்கும் அந்த மாறுபட்ட சுபாவத்திற்கும் கிராஸ் ட்ரெஸ்ஸர் என்று பெயர் என்பதனை அறிந்தேன்.

என் கணவரை போல ஒருவர் அன்பு செலுத்த முடியுமா? என்பதை என்னால் நிச்சயம் கூற இயலாது.

பெரும்பாலும் ஆண்கள் தங்கள் அலுவலகத்தில் இருக்கும் எரிச்சல், கோபத்தை எல்லாம் வீட்டில் வந்து மனைவி, பிள்ளைகள் மீது தான் கொட்டுவார்கள்.

ஆனால், என் கணவர் அப்படி இல்லை. அவர் வீட்டில் நடக்கும் விஷயங்களை அலுவலகத்திற்கு எடுத்து சென்றதில்லை, அதே போல… அலுவலக பிரச்சனைகள் காரணமாக எங்களை திட்டி, கோபமாக நடத்தியதும் இல்லை.
என் கணவரை அன்பானவர் என்பதை காட்டிலும், சீரானவர் என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என கருதுகிறேன்.

என்னென்ன, வேலைகளை, எப்போது சீரான இடைவேளையில் செய்ய வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

அது குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதில் இருந்து, மருத்துவ பரிசோதனைகள், வயிற்றை சுத்தம் செய்ய ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாத்திரை எடுத்துக் கொள்வது, தாம்பத்தியம் என அனைத்திலும் அவர் ஒரு சீரான நபர்.

5-1542865486ஆனால், என் கணவரிடம் தென்பட்ட அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் விஷயம் தான் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஒருசில மாதங்களுக்கு பிறகு, அவர் பேசி புரியவைத்த பின்… இது சாதாரணம் என்று தான் என நான் ஏற்றுக் கொண்டேன். மேலும், அவர் எப்போதாவது தான் அப்படி நடந்துக் கொள்வார்.

நம் வீடுகளில் சிறு பிள்ளையாக இருக்கும் போது, ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகள் உடுத்தி அழகுப் பார்ப்பது, பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளை அணிந்து அழகுப் பார்ப்பது போன்ற பழக்கம் இருக்கும்.

ஒருவேளை அப்படியான ஒரு ஆர்வம் / ஆசையாக இது வளர்ந்திருக்க கூடும் என்றே நான் கருதினேன்.

ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக என் கணவரின் அந்த கிராஸ் ட்ரெஸ்ஸர் ஆர்வத்தில் ஒரு மாற்றம் தென்பட்டுள்ளது.

அவர் பெண் போல உடை அணிந்துக் கொண்டது, அலங்காரம் செய்து கொள்வது மட்டுமின்றி, அவர் அப்படியான அலங்காரத்தில் இருக்கும் போது, செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்.

7-1542865512
ஆரம்பத்தில் என்னால் முடியாது என்று கடுமையாக கூறிவிட்டேன். ஆனால், இதன் பிறகு அவருக்கும், எனக்கும் இடையிலான உறவில் சிறு மாற்றம் தென்பட துவங்கியது.

அதுவும் தாம்பத்திய உறவின் போது மட்டும் தான். அவரது அந்த ஆசையை நான் நிறைவேற்றியே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். மிகவும் கோபம் கொள்கிறார்.

கணவனை பெண் உடையில் காண்பதே பெரும் கொடுமை. ஆனால், பெண் அலங்காரத்தில் இருக்கும் கணவனுடன் எப்படி நான் கூடி, கலவ முடியும்? அது அசௌகரியமாக இருக்கிறது என்பதை தாண்டி, அருவருப்பாகவும், என்னை நானே வெறுக்கும் வகையில் இருக்கிறது. எனக்கு ஏதோ பெண்ணுடன் உறவுக் கொள்வது போன்ற உணர்வு வெளிப்படுகிறது.

8-1542865524இப்போதெல்லாம், அவர் அடிக்கடி இப்படியான உறவில் ஈடுபட வற்புறுத்துகிறார். இது சாதாரணம் என்று கருதியது என் தவறா? அல்லது அவரை ஏதாவது மனநல மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டுமா? என்ற குழப்பத்தில் சிக்கியிருக்கிறேன்.

9-1542865538

எனக்கு தெரிந்த நெருக்கமான தோழியிடம் இதுக்குறித்து விளக்கினேன். அவள், அவளுக்கு தெரிந்த மனோத்தத்துவ நிபுணரிடம் பேசி, “கிராஸ் ட்ரெஸ்ஸராக இருப்பது பிரச்சனை இல்லை.

ஆனால், இப்படியான கட்டாயப்படுத்தும் முறை தவறானது. கவுன்சிலிங் வருமாறு”, அந்த நிபுணர் சொன்னதாக கூறினாள்.

10-1542865549நிச்சயமாக, மனநல மருத்துவரிடம் சென்று வரலாம் என்றால், அவர் வர மாட்டார். ஆனால், எப்படியாவது இதில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் என் கணவரை மனோத்தத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல தான் வேண்டும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.