ட்ரம்பின் வரவை எதிர்த்து இரு பெண்கள் அரை நிர்வாணப் போராட்டம்

0
191

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகருக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது வாகன அணிவகுப்புக்கு முன்பு இளம் பெண்கள் இருவர் தமது மேலாடையை கழற்றி எரிந்து அரை நிர்வாணமாக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் செயற்படுத்தி வரும் பல்வேறு கொள்கைகளுக்கு உலகம் முழுவதுமே எதிர்ப்பு நிலவி வருகிறது. வெளிநாட்டு தொழிலாளர்கள், அகதிகளுக்கு கெடுபிடி, மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு கட்டுபாடு, குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் வர தடை உள்ளிட்ட நடவடிக்கைகள் அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரான்ஸ் பயணித்துள்ள ட்ரம்ப், பாரிஸ் நகரில் நடந்த முதல் உலகப்போர் நினைவு தினத்தில் பங்கேற்றார். பாதுகாப்பு வாகனங்கள் புடை சூழ அவரது வாகனம் பாரிஸ் நகரில் வந்து கொண்டிருந்த போது திடீரென இளம் பெண் ஒருவர் தனது மேலாடையை கழற்றி வீசியபடி ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார். அவரை தொடர்ந்து மேலும் ஒரு பெண் அதேபோன்று மேலாடையை கழற்றி எறிந்தவாறு ஓடி வந்தார்.

உடனடியாக பிரான்ஸ் பொலிஸார் அவரை சுற்றி வளைத்தனர். ஆனால் மற்றொரு இளம் பெண் பொலிஸாருக்கு பிடிகொடுக்காமல் நிர்வாணத்துடன் கீழே விழுந்துபடி தொடர்ந்து கோஷம் எழுப்பினார். பின்னர் பொலிஸார் அவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனால் ட்ரம்ப் வாகன அணிவகுப்பில் பதற்றம் ஏற்பட்டது.

ட்ரம்புக்கு எதிப்பு தெரிவித்து பாரிஸ் பெண்ணிய இயக்கங்கள் போராட்டங்கள் அறிவித்து இருந்தன. நிர்வாண போராட்டம் நடத்திய பெண் அந்த அமைப்பை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ட்ரம்ப் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைபாடு இருந்ததாக புகார் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.