“என்ன ஒரு கிரியேட்டிவிட்டி”…சபாஷ் போட வைத்த சிறுவர்கள்!

0
302

கடந்த சில நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.அதோடு அந்த புகைப்படம் பலரையும் உணர்வு பூர்வமாக தொட்டிருக்கிறது.அப்படி என்ன தான் இருக்கிறது அந்த புகைப்படத்தில்.

“பாஸ் நீக்க நினைக்குறது போல ரொம்ப பெரிய விஷயம் ஒன்னும் அந்த படத்துல இல்ல”.அப்படி நீங்க நெனைச்சா அது உண்மை தான்.ஆனால் உங்களை நிச்சயம் அந்த புகைப்படம் உணர்வு பூர்வமாக யோசிக்க வைக்கும்.

கிராமங்களில் சிறு வயதில் நமது நண்பர்களோடு சேர்ந்து விளையாடிய நினைவுகள் நமக்கு எப்போதுமே பசுமையாய் நெஞ்சில் நிலைத்திருக்கும்.

இந்த புகைப்படம் அந்த நினைவுகளை மட்டும் நம் கண் முன்னே கொண்டு வராது.காரணம் கேரம் விளையாட உபயோகிக்கும் பலகையை தத்துரூபமாக மண்ணில் அச்சிறுவர்கள் வடிவமைத்திருக்கும் விதம் தான்.

எதார்த்தமாக ஒரு கேரம் பலகை எப்படி இருக்குமோ அதே வடிவத்தில்,அதிலிருக்கும் துளைகள் என அனைத்தையும் தத்துரூபமாக மண்ணில் செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் அந்த சிறுவர்கள்.வறுமை என்பது எதற்கும் தடையில்லை.

அதேபோல் தங்களின் கற்பனை திறனுக்கு வானம் கூட எல்லையில்லை,என்பதை நிரூபித்திருக்கிறார்கள் இந்த சிறுவர்கள்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.