திருமணமாகி 28 வருடத்தில் 44 குழந்தைகளை பெற்ற பெண்மணி!!

0
195

முகோனா-வை சேர்ந்த மரியம் நபடான்ஸி என்பவர் தனது 40 வயதில் 44 குழந்தைகளை பெற்றெடுத்து தாயான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

உகாண்டா நாட்டிலேயே அதிக குழந்தைகளை பெற்றெடுத்த அதிசய பெண்மணி இவர் மட்டு தான் என்பது பார்பவர்களை தலை சுற்ற வைக்கிறது.

மரியம் நபடான்ஸி தனது சித்தியின் பராமரிப்பில் வளர்ந்தவர். மேலும், இவர் ஒரு பெரிய பெரிடரிளிருந்து மீட்கப்பட்டவர். அப்படி, என்ன பேரிடர் என்று பார்கிரீர்களா?.

ஒருநாள் இவரது சித்தி இவரது சகோதரிகள், மற்றும் சகோதரனுக்கு உணவில் கண்ணாடி துகள்களை இட்டு பரிமாரியுளார்.

அதை உண்ட அவரது உடன் பிறந்தவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திம் போது அதிஷ்டவசமாக மரியம் நபடான்ஸி மட்டும் வீட்டில் இல்லாமல் வெளியில் சென்றுள்ளதால் இந்த சம்பவத்திலிருந்து அவர் தப்பியுள்ளார்.

இதையடுத்து, மரியம் நபடான்ஸி தனது 12 வயதில் 28 வயதுடைய ஒரு நபர திருமணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை துவங்கியுள்ளார்.

அவரது கணவர் தினமும் அவரை குடித்துவிட்டு சித்ரவதை செய்துள்ளார். இப்படிப்பட்ட வாழ்கையில் விருப்பம் இல்லாவிட்டாலும் மறுக்க முடியாது, குடும்பம் நடத்தி தான் ஆக வேண்டும் என்ற சூழ்நிலை அவருக்கு. வீட்டில் இருக்கும் பலவேலைகளை செய்வது மட்டுமல்லாமல், வெளியில் சென்றும் வேலை செய்தாக நபடான்ஸி கூறியுள்ளார்.

இவர் தனது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவ காலத்திலேயே கழித்துள்ளார். இவருக்கு வெறும் ஆறு குழந்தைகள் மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை.

ukan1ஆனால், இவர் தனது ஆறாவது பிரவத்தின் போதே 18 குழந்தைக்கு தாயாகியுள்ளார். அவரது 23 வயதில் அவர் 25 குழந்தைக்கு தாயாகியுள்ளார். இவருக்கு அவரது முதல் பிரசவத்திலேயே மூன்று குழந்தைகளை பெற்றுள்ளார்.

இரண்டாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளது. இவருக்கு பிறந்த 44 குழந்தைகளில் 6 இரட்டைக் குழந்தைகள், 4 முறை மூன்று குழந்தைகள், 3 முறை நான்கு குழந்தைகள், 8 தனிக் குழந்தைகள் என்று மொத்தம் 44 குழந்தைகளை பெற்றெடுத்திருகிறார்.

தனது 44 குழந்தைகளில் தற்போது அதில் 38 குழந்தைகள் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.