ஒரு ஓவர்..இரண்டு பேஸ்ட்மேன்கள்..43 ரன்கள்: இது நியூசிலாந்து வினோதம் (விடியோ இணைப்பு)

0
124

ஹாமில்டன்:நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ஒருநாள் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுக்கப்பட்ட  வினோதம் நிகழ்ந்துள்ளது.

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் புதன்கிழமையன்று வடக்கு மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள் அணிகளுக்கு இடையேயான உள்ளூர்  ஒருநாள் போட்டி ஒன்று நடைபெற்றது.

இதில் வடக்கு மாவட்டங்கள் அணியின் சார்பாக ஜோ கார்ட்டர் மற்றும் பிரட் ஹாம்ப்டன் ஆகிய இருவரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது மத்திய மாவட்டங்கள் அணிக்காக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் வில்லெம் லுடிக் பந்து வீசினார்.  

இவர் தனது ஓவரில் இரண்டு நோ பால்கள் உட்பட 8 பந்துகள் வீசினார். அதில் ஜோ கார்ட்டர் மற்றும் பிரட் ஹாம்ப்டன் இருவரும் 6சிக்ஸர்கள், 1 பவுண்டரி மற்றும் ஒரு சிங்கிளும் அடித்தார்கள்.

இதன் காரணமாக அந்த ஒரு ஓவரில் இரண்டு நோ பால்களுக்கான 2 உதிரிகளையும் சேர்த்து மொத்தம் 43 ரன்கள் எடுக்கப்பட்டது.  

இது ஒரு  போட்டிகளுக்கான சாதனையாகும். முன்னதாக டாக்கா பிரீமியர் லீக் போட்டியில், அபானி லிமிட்டட் அணிக்கெதிரான போட்டியில் ஷேக் ஜமால் தன்மொண்டி அணிக்காக ஜிம்பாப்வேயின் எல்டன் சிக்கும்பரா அடித்த 39 ரன்களே அதிக பட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.