கோத்தாவின் வாகனம் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து

0
120

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும், அவரது மனைவியும் பயணித்த வாகனம், இன்று காலை விபத்துக்குள்ளாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாந்தோட்டை- மெதமுலானவில் உள்ள தமது இல்லத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, ஹக்கம பகுதியில், சிறிய உழவு இயந்திரத்துடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டது.

உழவு இயந்திரத்தில் மோதிய கோத்தாபய ராஜபக்சவின் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து. மரம் ஒன்றுடன் மோதி நின்றது.

இந்தச் சம்பவத்தில் கோத்தாபய ராஜபக்சவுக்கோ, அவரது மனைவிக்கோ எந்தக் காயங்களும் ஏற்படவில்லை. அவர்கள் மற்றொரு வாகனத்தில் ஏறி பயணத்தை தொடர்ந்தனர்.

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்தார். கோத்தாபய ராஜபக்சவின் வாகன சாரதியும் சிறிய காயங்களுக்கு உள்ளானார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.