அதிர்ந்தது மதுரை.. வாலிபரை அடித்து கொன்று நடு ரோட்டில் எரித்து விட்டு தப்பிய கும்பல்

0
220
மதுரை: இப்படி ஒரு பயங்கரமான கொலையை மதுரை மாவட்ட மக்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்றே தெரிகிறது.
பட்டப்பகலில் நடந்துள்ள இந்த கொலையை செய்தவர்கள் யார் என போலீசாரும் விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் என்ற இளைஞர். 22 வயதான அரவிந்த்தை வருச்சூரைச் சேர்ந்த நெருங்கிய நண்பர் தன் வீட்டுக்கு கறிவிருந்துக்காக அழைத்திருந்தார்.

அதனால் நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

விளத்தூர் என்ற கிராம அருகே அரவிந்த் வந்து கொண்டிருந்தபோது, திடீரென 2 கார்களில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்தனர்.
அவர்களை சற்றும் எதிர்பார்க்க அரவிந்த் அங்கிருந்து தப்ப முயன்றார். ஆனாலும் அநத் கும்பல் கையில் கொண்டு வந்திருந்த பயங்கரமான ஆயுதங்களால் அரவிந்த்தை சரமாரியாக வெட்ட தொடங்கியது.
வயிறு உள்ளிட்ட இடங்களிலும் கத்தியால் கண்மூடித்தனமாக குத்த தொடங்கியது.
இதில் அங்கேயே அரவிந்த் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத அந்த கும்பல், அரவிந்த்தை தூக்கி அவரது பைக் மீது போட்டு, பெட்ரோலை ஊற்றி கொளுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

நடுரோட்டில் அரவிந்த் உடல் பற்றி எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியிலும் பீதியிலும் நாலாபுறமும் சிதறி தலைதெறிக்க ஓடினார்கள்.

இப்படி ஒரு கோரமான கொலை குறித்து உடனடியாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் சொல்லப்பட்டது.
விரைந்து வந்த அவர்களும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.

முதல்கட்டமாக முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது

அரவிந்த்தின் சகோதரர் ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறாராம்.
அதனால் இது ஒரு பழி வாங்கும் கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

அதனால் கொலை செய்தவர்கள் யார், உறுதியான காரணம் என்ன என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.