உறுதியானது சிம்பு மற்றும் பிக்பொஸ் ஐஸ்வர்யாவின் அடுத்த படம்…!

0
189

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகியிருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சிம்பு நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த படத்தில் அவருக்கு வாய்ப்பிருப்பதாக நடிகர் சென்ராயன் கூறியிருந்தார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளை நடிகர் சிம்பு, அனிருத், மகத் ஆகியோருடன் ஐஸ்வர்யா கேக் வெட்டிக் கொண்டாடி உள்ளார்.

அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சிம்புவின் அடுத்த படத்தில் ஐஸ்வர்யாதான் நாயகி என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஐஸ்வர்யாவின் பிறந்தநாளில் சிம்பு கலந்துகொண்டிருப்பது அதை உறுதி செய்வதாக குறிப்பிடப்படுகின்றது.

44368360_324062551479873_7835500972008650719_n

பிக்பொஸ் 2 நிகழ்ச்சியில் மகத், ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யாதத்தா உள்ளிட்ட 16 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர்.

இதில் ரித்விகா வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐஸ்வர்யா பிக்பொஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக்பொஸ் வீட்டில் அவரது நடவடிக்கைகள் விமர்சிக்கப்பட்டபோதும் நிகழ்ச்சியின் இறுதிகட்டம் வரை சென்றார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி முடிந்த பின்பு அவருக்கான பட வாய்ப்புகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.