அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி’: விராட் கோலிக்கு ‘க்யூட்’ பிறந்தநாள் வாழ்த்து

0
77

:”‘அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். “,

மும்பை:அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி திங்களன்று தன்னுடைய முப்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இதற்காக அவரும் அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் ஹரித்வாருக்கு சென்றுள்ளார்கள்.

அங்குள்ள ஆஸ்ரமம் ஒன்றில் அவர்கள் பிறந்தநாளைக் கழிக்க விரும்புவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் 'அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி என்று விராட் கோலியின் பிறந்த நாளுக்கு அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரும் விராட் கோலியும் கட்டி அணைத்திருக்கும் ஒரு அழகான படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த போட்டோவிற்கு தலைப்பாக மிகவும் எளிமையாக, ஆனால் காதல் ததும்பும் வகையில்;அவர் பிறந்ததற்கு கடவுளுக்கு நன்றி' என்று கூறியுள்ளார். 

எளிமையான ஆனால் க்யூட்டான அவரது இந்த வாழ்த்தினை அனைவரும் சிலாகித்துள்ளனர்.இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவரது படத்திற்கு விருப்பக் குறியீட்டு வாழ்த்தியுள்ளார்கள்.      ”,
“articleSection” : “செய்திகள்”,

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.