இரான் மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கும் அமெரிக்கா – இந்தியாவின் நிலை என்ன?

0
192

அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை இரான் மீது இன்று விதிக்கவுள்ளது.

இரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது.

இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும்.

ஞாயிறன்று ஆயிரக்கணக்கான இரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.

தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமான அணிவகுப்புகளை நடத்தப்போவதாக இரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இரான் இடையே முரண்களை ஏற்படுத்திய டெஹ்ரானில் ஆக்கிரமிப்பு செய்த அமெரிக்க தூதரகத்தின் 39ஆவது ஆண்டு தினத்தில் இந்த போராட்டங்கள் நடைபெற்றன

அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், “இரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்ததிலேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்” என தெரிவித்தார்.

இதன் தொடக்க என்ன?

சைபர் தாக்குதல்கள், பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகள், மத்திய கிழக்கில் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாத குழுக்களுக்கு ஆதரவு போன்ற தீய செயல்களை இரான் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

“இரான் மக்களுக்கு ஆதரவு தரும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம் அதே சமயம் இரானின் தீய நடத்தை மாறவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என அமெரிக்க செயலர் பாம்பேயோ ஃபாக்ஸ் நியூசிடம் தெரிவித்தார்.

என்ன தாக்கம்?

700க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள், கப்பல்கள், விமானங்கள், முக்கிய வங்கிகள், எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் கப்பல் சரக்கு நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது தடைகள் விதிக்கப்படும்.

இந்த தடையால் 100க்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் இரானிலிருந்து விலகியுள்ளது என்று பாம்பேயோ தெரிவித்தார்.

பிரிட்டன், ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் இந்த தடைக்கு தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன.

இரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா துருக்கி என தங்களின் கூட்டணி நாடுகளை டிரம்ப் நிர்வாகம் தடையிலிருந்து விலக்கியுள்ளது.

இரானின் பதில் நடவடிக்கை என்ன?

அமெரிக்காவின் இந்த தடை, அமெரிக்க ஆதரவு பெற்ற இரான் அதிபர் ஷாவின் வீழ்ச்சிக்கு பிறகு 1979ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரானில் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்ட தினத்தன்று விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தூதரகத்தில் 52 அமெரிக்கர்கள் பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் அன்றிலிருந்து இருநாடுகளும் எதிரிகளாக இருந்து வருகின்றன.

கடும்போக்கு வாதிகள் ஒவ்வொரு வருடமும் இந்த முற்றுகை நாளன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர் இந்த வருடம் இந்த தடையை எதிர்த்தும் அவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

_104173691_12069699-3747-4df2-a205-19b856ee7b4dஅமெரிக்காவால் இரான் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என கமேனி தெரிவித்துள்ளார்

நாட்டின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு ஆதரவளிக்கும் விதமாக மில்லியன்கணக்கான மக்கள் நகரங்களில் ஒன்றுகூடியதாக இரான் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அந்த எண்ணிக்கையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.

கூட்டத்தில் பேசிய கமேனி, 1979ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் செலுத்திய ஆதிக்கத்தை அமெரிக்கா இரான் மீது மீண்டும் செலுத்த வேண்டாம் என தெரிவித்தார்.

அதே சமயம், இரானில் #Sorry_US_Embassy_Siege என்ற ஹாஷ்டேகில் 19,000 மக்கள் ட்வீட் செய்துள்ளனர்.

அதில் ஒருவர், “கடந்த 40 வருடங்களாக இரானின் இஸ்லாமிய அரசு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இரானின் எதிர்கள் என சித்தரித்து வருகின்றனர். ஆனால் இரான் மக்கள் அவ்வாறு எண்ணவில்லை நாங்கள் அனைத்து நாடுகளையும் நேசிக்கிறோம் உலகிலுள்ள அனைத்து மக்களையும் நேசிக்கிறோம்.” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.