“பெரும்பான்மையை உறுதிப்படுத்த ரணில் தவறிவிட்டார்”

0
192

ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது உறுதியாக்கப்பட்டுள்ளது.  இன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களின் எண்ணிகையின் ஊடாக இவ்விடயம் வெளிப்பட்டுள்ளது என  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய தேசிய முன்னணியில் தற்போது 98  உறுப்பினர்கள் மாத்திரமே  காணப்படுகின்றது. பாராளுமன்றத்தில் அருதி பெரும்பான்மை ஆதரவினை பெற வேண்டுமாயின் 113  உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கப் பெற வேண்டும்.இருப்பினும்  இன்றைய தினம்  அனைத்து கட்சிகளையும் முன்னிலைப்படுத்தி 112 உறுப்பினர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர்.

இன்று பாராளுமன்றத்திற்கு ஐக்கிய தேசிய  முன்னணியின் 98 உறுப்பினர்களும், தமிழ்  தேசிய கூட்டமைப்பின் 12 உறுப்பினர்களம், மக்கள் விடுதலை முன்னணியில் 02 உறுப்பினர்னகளும், வருகை தந்திருந்தனர். இதன்டிப்படையில் தனது பெரும்பான்மை பலத்தினை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதிப்படுத்த தவறி விட்டார் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.