யாழ். அச்சுவேலி பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

0
117

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது அங்கிருந்து எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டிய போதே இவ்வாறு , கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி பொலிஸாருக்கு  தகவல் கொடுக்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.