30 கோடி மதிப்புள்ள ஓவியம் நொடியில் கிழிந்து தொங்கிய ஆச்சரியம்…!

0
166

லண்டனில் 10 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ஓவியம், அடுத்த கணமே கிழிந்த நிகழ்வு, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

லண்டனில் உள்ள அக்குஷன் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓவியங்களுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் உலக நாடுகளைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு ஓவியங்களை ஏலம் எடுத்தனர்.

ஏலத்தில் லண்டனைச் சேர்ந்த ஓவியர் பாங்கிசியின் ஓவியமும் இடம்பெற்றது. ஒரு சிறுமி பறக்கும் பலூனை நோக்கி கையை நீட்டுவது போல, அந்த ஓவியம் அமைந்திருந்தது.

அந்த ஓவியத்தை இலங்கை ரூபாய் மதிப்பில் 30 கோடிக்கு ஒருவர் ஏலத்தில் எடுத்தார். அடுத்த கணமே, ஓவியம் துண்டு துண்டாகக் கிழிந்தது. இதைக்கண்டவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்த ஓவியத்திலிருந்த மிஷின் மூலம் துண்டு துண்டானது எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இது குறித்து ஓவியர் பாங்கிசி விளக்கமளித்தார்.

அவர் கூறும் போது, “அழிவுதான் கலைகளில் மிகப்பெரியது என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்தேன். அந்த ஓவியத்தைக் கிழிப்பதற்காகவே ஏற்கனவே ரிமோட் மூலம் இயங்கும் மெஷினை இணைத்திருந்தேன்” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.