`வைரமுத்து மீது இப்போது புகார் ஏன்?’ சின்மயி சொல்லும் இரண்டு காரணங்கள்

0
387

சமீபகாலமாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை ’மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக் காட்டும் இந்த ‘மி டூ #MeToo’ கேம்பைன் கடந்த இரு தினங்களாக தமிழகத்திலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் பரபரப்பைக் கிளப்பிவிட்டிருக்கிறது. ‘

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் அனுப்பியதாக சில மெசேஜ்களை சந்தியா மேனன் என்கிற பத்திரிகையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப் புள்ளி.

அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த பின்னணிப் பாடகி சின்மயி (வைரமுத்து பாடல்கள் எழுதிய கன்னத்தில் முத்தமிட்டாள் முதல் பல படங்களில் பாடியிருக்கிறார்) அதில், ‘

அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். ’(இசையமைப்பாளர் அல்லவா பாட வாய்ப்புத் தருவார்’ என நினைக்கிறவர்களுக்கு; பிரபலமான பாடலாசிரியர்கள் பாடகிகளை சிபாரிசு செய்து கமிட் செய்வது பாலிவுட், கோலிவுட் என எல்லா இடத்திலும் இருப்பதே)

வைரமுத்து மீது சின்மயி குற்றச்சாட்டுகளை அடுக்க இவை இரண்டு விஷயங்கள் தான் காரணம் என முன்வைக்கிறார்.

2004ல் சுவிட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக ’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பி விட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள்,

பிறகு வைரமுத்து தங்கியிருந்த ஓட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்து விட்டேன். பிறகு அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன்’’

சின்மயி அம்மாவும் இதை உறுதிப்படுத்திய நிலையில், அமைதி காத்த வைரமுத்து ட்விட்டரில் பதில் தந்தார். அதில் ’அண்மைக் காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் பொருட்படுத்துவதில்லை’ எனச் சொல்ல, அதை ரீ ட்வீட் செய்த சின்மயி, வைரமுத்துவை ‘பொய்யர்’ என்றார்.

இப்படிப் போய்க் கொண்டிருக்கும் விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாகவும், ’வைரமுத்து வரிகளில் பாடிய போதெல்லாம் சொல்லாமல், ’இப்போது சொல்வது ஏன்’ எனக் கேள்வி எழுப்பியும் சமூக வலைத் தளங்களில் பலரும் கருத்திட்டு வருகின்றனர்.இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடகி சக்திஸ்ரீகோபாலன் போன்றோர் சின்மயிக்கு ஆதரவாக ட்விட் செய்திருக்கிறார்கள்.

இதற்கிடையில் , சுவிட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார்..

‘’அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார்’’ என சிலர் சொல்ல, சின்மயி அம்மாவோ ‘சுரேஷை ’தங்கமான பையன்’ என ஒரு விவாத நிகழ்ச்சியில் கூறியிருக்கிறார்.

சின்மயியிடம் இப்போது பேச வேண்டிய அவசியம் எப்படி வந்தது’ என்றோம்.

chinmayi_1_00016

‘மி டூ’ மூவ்மெண்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. எனவே பேச இது சரியான தருணமே. நிறைய பேர் இதைக் கடந்தே வந்திருப்பார்கள்.

பலரும் பல காரணங்களால் இதைப் பேச முடியாதவர்களாக இருக்கலாம். எனக்கு என் வீடும், கணவரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள், அதனால் பேசுகிறேன்’ என்கிறார்.

இந்த விவகாரம் எப்படி நீளும் என்பது தெரியவில்லை. சட்ட ரீதியாக அணுகி தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டுமென்றால், அதற்கு, ஆதாரம் தேவை. ‘மீ டூ’ இயக்கத்தின் நோக்கமே தவறு செய்ய நினைக்கிற ஆண்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுப்பதே’ என்கின்றனர், பாதிக்கப்பட்டதாக வெளியில் வரும் பெண்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.