விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது ; கெஹெலிய

0
198

விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு நஷ்டஈடு வழங்கி விடுதலைப் புலிகளின் நலன்களை மாத்திரம் கருத்தில் கொள்ளவே அரசாங்கம் முயற்சிகின்றது.

ஆகவே இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலத்தை ஆதரிப்பது புலிகளை ஆதரிப்பதாக அமையும் என கெஹெலிய ரம்புக்வெல எம்.பி தெரிவித்துள்ளார்.

உலகில் எந்த நாட்டிலும் பயங்கரவதிகளுக்க்கு நஷ்டஈடு வழங்குவது இல்லை. பயங்கரவாதிகளினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கே நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே கெஹெலிய ரம்புக்வெல எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.