காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பின் சுட்டுக்கொன்ற காதலன்: பெற்றோரின் கண் முன்னே நடந்தேறிய கொடூரம்

0
260

இந்தியா, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அன்னியூர் கிராமத்தில் இன்று அதிகாலை நடந்த கொடூர சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கார்த்திக்வேல் என்பவர் பேஸ்புக் மூலம் சரஸ்வதியை காதலித்துள்ளார். மருத்துவ கல்லூரியில் சரஸ்வதி பணியாற்றி வந்துள்ளார். கார்த்திக்வேல் சென்னையில் பொலிஸாராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், முதலில் இருவரும் காதலித்து வந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கு பின்னர் சரஸ்வதியிடம் மாற்றம் தெரிந்துள்ளது.

ஒரு சாதாரண பொலிசை நீ காதலிக்கிறாய் என சரஸ்வதியின் தோழிகள் அவரை கிண்டல் செய்துள்ளதாகவும், இதனால் அவரது போக்கில் மாற்றம் தெரிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரஸ்வதியின் பிறந்தநாளான இன்று வாழ்த்து சொல்ல வந்த கார்த்திக்வேல் சரஸ்வதியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார்.

சரஸ்வதி வீட்டில் இவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், பெற்றோர் கண்முன்னே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளதால், அதிர்ச்சியில் பெற்றோர் கதறி அழுதனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.