மன்சூர் அலிகானின் 3ஆவது மனைவியை அடித்த 2ஆவது மனைவியின் வாரிசுகள்…!

0
331

திரைப்படங்களில் பல வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தும் வகையில் நடித்து புகழ் பெற்றவர் மன்சூர் அலிகான். இவருடைய குடும்ப பின்னணி காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கி தவிப்பவர்.

தற்சமயம் மன்சூர் அலிகானின் 2வது மனைவி பேபி என்கிற ஹமீதா. இவரது 2ஆவது மனைவியின் வாரிசுகளான மகள் லைலா அலிகான் (வயது சுமார் 22), மகன் மீரான் அலிகான் (வயது சுமார் 15) ஆகிய இருவரும் மன்சூர் அலிகானின் 3வது மனைவியான வஹிதாவை இரும்பு கம்பிகளால் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நடக்கும் வேளையில் மன்சூர் அலிகான் மற்றும் அவருடைய 2ஆவது மனைவி பேபி என்கிற ஹமீதா வேடிக்கை பார்த்து கொண்டிருந்துள்ளனர்.

இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ள வஹிதா தற்போது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான், ஹமீதா, லைலா அலிகான் மற்றும் மீரான் அலிகான் மீது புகார் தெரிவித்துள்ளார்.

பின்னர் வஹிதா அவருடைய சகோதரியுடன் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். மன்சூர் அலிகானின் 3வது மனைவி வஹிதா, மன்சூர் அலிகானின் அக்கா மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நுங்கம்பாக்கம் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.