மசூதியின் மேற்கூரை மீது வீசப்பட்டிருந்த சாக்குப்பையில் கசிந்த இரத்தம் : 7 வயது சிறுமி கொன்று திணிக்கப்பட்டிருந்த கொடூரம்

0
182

இந்தியா உத்தரப்பிரதேசத்தில் 7 வயது சிறுமி கொல்லப்பட்டு, மசூதியின் மேற்கூரையில் உடல் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முராத் நகரைச் சேர்ந்த சிறுமி, கடந்த சனிக்கிழமையிலிருந்து காணாமல் போனதாக, பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில், அங்குள்ள மசூதியின் மேற்கூரையில் இரத்தக்கறையுடன் மூட்டை கட்டப்பட்ட சாக்குப்பை ஒன்று மீட்கப்பட்டது. அதில், கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

தகவலறிந்து வந்த பொலிசாரும், பெற்றோரும் அங்கு வந்த பார்த்தபோது, காணாமல் போன சிறுமிதான் கொல்லப்பட்டாள் என உறுதி செய்யப்பட்டமையால், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இக்கொலையை, முராத் நகரைச் சேர்ந்த கவுன்சிலரும் அவரது 3 சகோதரர்களும்தான் செய்திருக்கக் கூடும் என்றும், தேர்தல் முன்விரோதம் காரணமாக கொன்றிருக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளமையும் குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.