இந்தியா, புனேவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பட்டம் விட பயன்படும் மாஞ்சா கயிறு சிக்கி, கழுத்தை அறுத்ததில் பெண் வைத்தியர் பலியாகியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
புனேவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்தியராக பணியாற்றி வந்த 26 வயதான குருபாலி நிகம் என்பவர், நேற்று மாலை 6.45 மணிக்கு வைத்தியசாலையில் இருந்து தன்னுடைய வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.
இதன்போது, பட்டம் விட பயன்படுத்தப்படும், மாஞ்சா கயிறு கழுத்தில் சிக்கி அறுத்துள்ளது. இதில் நிலைகுலைந்த வைத்தியர் நடுவீதியிலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
இரத்த வெள்ளத்தில் இளம்பெண் ஒருவர் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தற்போது வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், பட்டம் விட்டவர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.