இலங்கையின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது

0
329

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார்

யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரையொன்று குறித்து திட்டமிட்ட குற்றவிசாரணைப் பிரிவிற்கு வாக்குமூலமொன்றை வழங்கச் சென்ற நிலையில் கைதுசெய்யப்பட்டடார்.

கைதுசெய்யப்பட்ட விஜயகலா மகேஸ்வரன் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கடந்த ஜுலை மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், இன்றைய சூழலில் தமிழீழ விடுதலை புலிகளை உருவாக்கவேண்டும் என்பதே எங்களுடைய முக்கிய நோக்கம் என சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

இவரின் கருத்து இலங்கை அரசியல் அரங்கில் பலத்த சர்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

_102398009_fa18dd5e-b02e-47bc-9a00-b82dc2e075d8

யாழ்ப்பாணத்தில் ஜுலை மாதம் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையின் சுருக்கம்

”நாங்கள் நிம்மதியாக வாழவும், நாங்கள் நிம்மதியாக வீதியில் நடக்கவும், எங்களுடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்ப வேண்டுமாகவும் இருந்தால் வடக்கு கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கை ஓங்கவேண்டும்.” என்று தெரிவித்தார்.

அண்மையில் யாழில் பாடசாலை செல்லும் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இன்று ஜனாதிபதி தனது கட்சியை வளர்க்கிறார். எங்களுடைய மக்களை அவர் காப்பற்றவில்லை.”

“நாங்கள் 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இப்போது தான் உணர்கின்றோம்” என்று கூறியிருந்தார்.


LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.