வட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்

0
206

இனி வட்ஸ் அப் செயலியில் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற மற்ற செயலியின் வீடியோக்களை, சாட்டிங் செய்த படியே பார்க்கலாம்.

பொதுவாக ஒரு வீடியோ லிங்கை வாட்ஸ்அப் -இல் பகிர்ந்தால் அந்த லிங்கை கிளிக் செய்து யூடியூப்பிற்கு அல்லது வீடியோ பதிவிடபட்ட தளத்திற்கு சென்று பார்த்துவிட்டு பின் அது குறித்து பேசமுடியும் என்பது இதுநாள் வரை இருந்த வழி.

தற்போது இதை எளிமைபடுத்த உள்ளது வட்ஸ் அப் நிறுவனம். இந்த ஆண்டு துவங்கியதிலிருந்தே பல அப்டேட்ஸ்களை வழங்கி கொண்டிருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் தான் ‘ஸ்வைப் டூ ரிப்ளே’ ( swipe to reply ) என்ற சேவையை தன் அண்ட்ராய்டு போன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

தற்போது தனது அடுத்த வர்ஷனில், பிக்சர் இன் பிக்சர் ( picture in picture ) வசதியை வழங்க உள்ளது வட்ஸ் அப் நிறுவனம். இந்த வசதியின் சிறப்பு இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப் போன்ற செயலியின் வீடியோக்களை அந்த தளத்திற்கு சென்று பார்க்காமல், வாட்ஸ்அப் சாட்க்கு உள்ளேயே ஓடவிட்டு பார்க்க முடியும்.

இதன்மூலம் யூடியூப் இல் நாம் பார்த்த வீடியோவை நண்பர்களுக்கு வாட்ஸ்அப் – இல் ஷேர் செய்தால் அவர் யூடியூப் சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அங்கேயே பார்க்கலாம். ஆனால், அந்த சாட் பாக்ஸை விட்டு வெளியே வந்தால், சேவை செயல் நின்றுவிடும்.

இது தற்போது வேர்ஷன் 2.18.301 மட்டும் பீட்டா வர்ஷனாக அறிமுகப்படுத்தபட்டுள்ளது. விரைவில் அனைத்து போன்களுக்கும், அனைத்து வர்ஷன்களுக்கும் வரும் என நம்பலாம். இதை பயன்படுத்த விரும்பினால் உங்கள் வட்ஸ் அப் -ஐ அப்டேட் செய்து பாருங்கள், இல்லையென்றால் பேக்கப் ( backup ) செய்து, அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் ரீஇன்ஸ்டால் செய்து பாருங்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.