ராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்

0
2249

கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற செயற்பாடுகளாலும், தந்திரங்களாலும் மக்கள் வாழ்வு மட்டுமல்ல, இலங்கை – இந்திய உறவும் மிகவும் கீழ் நிலைக்குச் சென்றது.

இவ் விபரங்களை அறிய தொடர்ந்து படியுங்கள்.

இந்திய சமாதானப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நன்கு உணர்த்தியது.

ஒரு புறத்தில் மரணங்கள் அதிகரித்துச் செல்ல, நாட்டு மக்கள் மத்தியிலே அதிருப்தியும் வளர்ந்தது. இதனால் அடுத்த கட்ட நகர்வு எதுவெனத் தீர்மானிக்க முடியாத நிலை காணப்பட்டது.

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள், தமிழ்நாட்டின் ஆர்ப்பாட்டங்கள் போன்றன இந்தியாவின் பெருமை மிக்க ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உணரப்பட்டது.

imageproxy.phpஇத் தருணத்தில் இந்திய ராணுவத்திற்கு எதிராக ஜனாதிபதி பிரேமதாஸவின் போக்கும், ஜே வி பி இனரின் தாக்குதல் அதிகரிப்பும் நிலமைகளை மேலும் மோசமடையச் செய்தன.

இவ் வேளையில் ஜனாதிபதி பிரேமதாஸ புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்திருப்பது இந்திய தரப்பினர் மத்தியிலே பெரும் கசப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் இந்திய சமாதானப் படையினருக்கும், ஜனாதிபதிக்குமிடையேயான உறவு தினமும் மோசமான நிலையை நோக்கிச் சென்றது.

சிங்கள மற்றும் முஸ்லீம் கிராமங்களுக்குச் சமாதானப் படையினர் பாதுகாப்பினை வழங்காமையால் அப் பகுதி மக்கள் புலிகளின் தாக்குதல்களால் அவதிப்பட்டனர். ஓப்பந்தம் காரணமாக எம்மால் அம் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்க முடியவில்லை.

இந் நிலையில் எமது உள்நாட்டுப் பிரச்சனைகளை நாமே தீர்த்துக் கொள்கிறோம். நீங்கள் இந்தியா திரும்புங்கள் என ஜனாதிபதி மிகவும் கடும் தொனியில் பேசினார்.

ஆனால் இந்திய தரப்பினர் அவற்றை அசட்டை செய்தனர். இருப்பினும் மாற்று ஏற்பாடுகளை அவர்களும் ஆரம்பித்தனர். ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற பெயரில் இலங்கையின் இரண்டாவது ராணுவத்தைத் தோற்றுவித்தார்கள்.

இந்த ராணுவம் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணசபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்களின் தலைமையில் செயற்படும் வகையில் தமிழ் இளைஞர்கள், முதலமைச்சரின் கட்சி உறுப்பினர்கள் இணைக்கப்பட்டு சீருடை, பயிற்சி மற்றும் ஆயுதங்கள் வழங்கப்பட்டன.

இவ் ஏற்பாடுகள் இலங்கையின் சட்ட வரையறைகளுக்கு முரணானது எனவும், இலங்கையின் இறைமையை மீறுவதாகும் எனவும் பிரேமதாஸ தெரிவித்த போதிலும் இந்தியா செவிசாய்க்கவில்லை.

மிகக் குறுகிய காலத்தில் தமிழ்த் தேசிய ராணுவத்தின் தொகையும் அதிகரித்தது. இந்த இரண்டாவது ராணுவமும், இந்திய சமாதானப் படையினரும் விடுதலைப் புலிகளுக்கு அழுத்தங்களைப் போடுவதாக அமைந்தது.

இச் செயல்கள் இலங்கை அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான உறவை ‘எதிரிக்கு, எதிரி நண்பன்’ என்பது போல பொது எதிரியான சமாதானப் படையினருக்கு எதிராக இரு பிரிவினரும் இணைந்தனர்.

அதன் பிரகாரம் இந்திய ராணுவத்தை அகற்றுவது எனவும், அதில் இலங்கை ராணுவத்தையும் ஈடுபடுத்துவது என்ற குழப்பமான முடிவையும் எடுத்தனர்.

called-delegation-minister-gandhi-rifles-rafting-expedition_f5003854-3d48-11e7-99bd-b9a47f5fadca
பிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் தொடர்ந்த போது புலிகள் மிகவும் தான்தோன்றித்தனமாக, தன்னிச்சையாக இலங்கை ராணுவத்தை அவமதிக்கும் விதத்திலும் செயற்படத் தொடங்கினர்.

உதாரணமாக எமது ராணுவ முகாம்களை அவர்கள் கடந்து செல்லும் வேளையில் தமது சாரங்களை உயர்த்தி அம்மணமாகக் காட்டி ஏளனம் செய்து செல்வார்கள்.

நாம் எம்மால் முடிந்த அளவிற்கு அமைதி காத்தோம். ஆனால் இவை மிகவும் சகிக்கக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை.

‘நான் ஏன் ராணுவத்தில் இவ்வாறு அவமானப்பட வேண்டும்? இதற்காகவா நான் ராணுவத்தில் இணைந்தேன்?’ என எனக்குள் எண்ணியதுண்டு.

எனது சக அதிகாரிகளும், ராணுவத்தினரும் அவ்வாறான உணர்வைப் பெற்றிருப்பார்கள். நாளைய பொழுது நல்லதாக மலரும் என நம்பி அவற்றைப் பொறுத்துக்கொண்டோம்.

தமிழ்த் தேசிய ராணுவம் படிப்படியாகப் பலமடைந்ததால் வரதராஜப்பெருமாளும் அரச எதிர்ப்பு, ராணுவ எதிர்ப்பு உரைகளை அதிகரித்தார்.

மாகாணசபை அதிகாரிகள் எம்மை ஏளனப்படுத்தும் செய்கைகளுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஜே வி பி இனரின் தொடர்ந்த தாக்குதல்களால் நாம் விடுமுறையில்கூட வீடு செல்ல முடியவில்லை.

மக்கள் அகதி முகாம்களுக்குள்ளும், நாம் ராணுவ முகாம்களுக்குள்ளும் முடங்கினோம். எமது மக்களின் அவதூறுகளை நாம் பொறுத்துக்கொண்டாலும், இந்திய ஜவான்களின் அவமதிப்புகள் எம்மை மிகவும் பாதித்தன.

19748326_246133815875977_4554463204479300254_n

பிரேமதாஸ அரசிற்கும், புலிகளுக்குமிடையேயான இணக்கம் பலமடைந்தது. எனது எண்ணப்படி இந்திய சமாதானப் படையினர் தமது பொது எதிரி என்ற நிலைப்பாட்டிற்கு அவர்கள் சென்றிருந்தனர்.

இதன் அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விவாதித்தனர். இத் தருணத்தில் பிரேமதாஸ மிக ஆபத்தான முடிவை மேற்கொண்டார்.

அதாவது இந்திய சமாதானப் படையினர் தாமாக விலகிச் செல்லவில்லை எனில் நாம் ஒருமித்துச் செயற்பட்டுத் துரத்துவது என்பதாகும். இதுவே அரசு – புலிகளின் வேலைத் திட்டமாக அமைந்தது.

இத் திட்டத்தின் பிரகாரம் பொது எதிரியை விரட்டும் நோக்கில் ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கச் சம்மதித்தார். அந்த ஆயுதங்கள் வழங்கும் ‘ஊத்தை’ வேலையைச் செய்யும் பணி ராணுவத்திடம் வழங்கப்பட்டது.

இவ் ஆயுத பரிமாற்றம் வன்னியிலும், கிழக்கிலுமுள்ள காட்டுப் பிரதேசங்களுக்குள் நடைபெற்றது. இக் கொடுமையான தேச விரோத குற்றத்தில் ராணுவமும் இணைந்தது.

இந்திய ராணுவம் வெளியேறியதும், இந்த ஆயுதங்கள் எமக்கு எதிராகத் திரும்பும் என்பதை நாம் உணர்ந்திருந்தோம். எதிர் பார்த்தது போலவே இந்திய ராணுவம் வெளியேறியதும் முதலில் தமிழ் தேசிய ராணுவம் இலக்கு வைக்கப்பட்டது.

இவ்வாறு புலிகளிடம் ஆயுதங்களை ராணுவத்தினர் வழங்கிய வேளையில் சில ராணுவ அதிகாரிகள் அவற்றில் சிலவற்றைத் திருடினார்கள். ஆனாலும் நேர்மையான அதிகாரிகளின் முயற்சியால் அவர்கள் தண்டிக்கப்பட்டனர்.

இந்த ஆயுத வழங்கலில் நான் சம்பந்தப்படவில்லை. அங்கு சென்றவர்களில் பலர் புலிகளால் மிகவும் கட்டி அணைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள்.

ஆயுதங்களைப் பெற்ற புலிகளின் இறுமாப்பும், விகாரமான செய்கைகளும் ஒருநாள் இந்த ஆயுதங்கள் உங்களை நோக்கி ஏவப்படும் என்பதை எமக்கு உணர்த்துவது போலிருந்தது.

trying (9)_112712023300புலிகளின் பிரதித் தலைவரான ‘மாத்தையா’ எனப்படும் கோபாலசாமி மகேந்திரராஜா இப் பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

பல சிங்கள மக்களையும், ராணுவத்தினரையும் கொலை செய்த அவர் வெள்ளை நிற அங்கி அணிந்தே ஓர் உத்தம அரசியல்வாதி போலத் தோற்றமளித்தார்.

அவரது போலிச் சிரிப்புகளுக்கு நாம் மயங்காத போதிலும், பிரேமதாஸ மயங்கினார். நரிகள் வெள்ளாட்டின் போர்வையில் வந்ததை அவரால் காண முடியவில்லை. அவர் அவர்களை நூறு வீதம் நம்பினார். ஆனால் அதே அளவு நம்பிக்கையை மாத்தையா வழங்கினாரா? என்பது சந்தேகமே.

இப் பேச்சுவார்த்தைகளில் ‘மாத்தையா’ கலந்துகொண்ட போதிலும் இவர் மேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை குறைந்தே சென்றது.

இதற்குப் பிரதான காரணம் ஜனாதிபதி பிரேமதாஸவுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நெருங்கிய உறவும், அதன் காரணமாக இயக்கத்திற்குள் வளர்ந்திருந்த மதிப்புமாகும்.

220px-Pottu_Ammanதமது தலைமைக்குச் சவாலாக அவர் மாறலாம் என பிபாகரன் எண்ணினார். இதன் காரணமாக இந்திய உளவுப் பிரிவுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் புலிகளின் உளவுத்துறைப் பொறுப்பாளர் ‘பொட்டு அம்மான்’ இனால் விசாரிக்கப்பட்டு நீண்ட சிறையும், சித்திரவதைகளும் அனுபவித்த அவர் இறுதியில் கொல்லப்பட்டார்.

இவ் அனுபவம் காரணமாக புலிகளின் பிரதித் தலைவர் பதவிக்குப் போட்டியிட எவரும் முன்வருவதில்லை. வட பகுதித் தலைவர்கள் இவரது மரணம் குறித்துக் கவலை அடைந்த போதிலும் குற்றத்தை மறுதலித்துப் பேச எவரும் முன்வரவில்லை.

பிரேமதாஸ அரசு வழங்கிய ஆயுதங்கள் இந்திய தரப்பில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியதால் மரணங்களின் தொகையும் அதிகரித்துச் சென்றது.

இதனால் இந்திய அரசு உள்நாட்டிலும் பலத்த அழுத்தங்களை எதிர்நோக்கியது. அந்த வேளையில் இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தல் வி. பி. சிங் தலைமையிலான கட்சி பிரதமர் ராஜிவ் காந்தி அரசைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்ததால் இலங்கைப் பிரச்சனை புதிய அரசின் கவனத்திற்கு வந்தது.

பிரேமதாஸ அரசின் இந்திய எதிர்ப்பின் விளைவாக அவருக்கு எதிரான உணர்வு அதிகரித்திருந்ததை நான் பின்னர் காலங்களில் அங்கு ராணுவப் பயிற்சிக்குச் சென்ற போது அவதானிக்க முடிந்தது. ஆனாலும் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் குறித்து இந்திய ராணுவம் மத்தியிலே நல்ல மதிப்புக் காணப்பட்டது.

பிரதமர் வி. பி. சிங் தனது ராணுவத்தை வெளியேறும்படி பணித்த வேளை தமிழ்த் தேசிய ராணுவம் சமாதானப் படையின் இடத்தை நிரப்பும் என இந்திய அதிகாரிகள் கருதினர்.

இந்திய ராணுவம் வெளியேறியதும், எமது ராணுவம் எதிர் நோக்கக்கூடிய இடர்களை நாம் உணர்ந்திருந்தோம். சமாதானப்படை வெளியேறியதும் அந்த இடைவெளியைப் புலிகள் நிரப்ப எண்ணுவார்கள்.

எனவே முதலில் தமிழ்த் தேசிய ராணுவம் இலக்காவார்கள். அதன் பின்னர் நாம் என்பதையும் புரிந்திருந்தோம். ஆனால் இந்த ஆபத்தினை ஜனாதிபதி பிரேமதாஸவும், அவரது அரசும், இந்திய அரசும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் நாம் அறிந்திருந்தோம்.

இந்திய ராணுவம் வெளியேறுவதை இந்திய மக்களும், பிரேமதாஸ அரசும், புலிகளும், இலங்கை மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

p0ஆனால் தமிழ்த் தேசிய ராணுவம், வரதராஜப் பெருமாளின் மாகாண அரசு என்பவற்றின் முடிவின் தொடக்கமாக அவை அமைந்தன. ஈற்றில் 1990ம் ஆண்டு மார்ச் 24 ம் திகதி திருகோணமலையிலிருந்து இறுதிச் சமாதானப் படைப் பிரிவும் வெளியேறியது.

இத் தினம் வரையிலான 3 வருடகாலத்தில் சுமார் 1500 படை வீரர்கள் மரணித்து, பல ஆயிரம் பேர் காயமடைந்தனர். இலங்கை விவகாரத்தில் இவ்வளவு பெருந்தொகையான ராணுவ இழப்பை தாம் சந்திப்போம் என இந்திய அதிகாரிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

சமாதானப் படையினர் இலங்கையிலிருந்த வேளையில் ராணுவபயிற்சிக்காக சுமார் 4 மாதங்கள் பாகிஸ்தான் சென்றிருந்தேன். என்னுடன் மேலும் மூவர் வந்திருந்தனர்.

பயிற்சி முடிந்து எமது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட வேளையில் இந்திய சமாதானப் படையினர் குறித்து என்னிடம் வினவியபோது ‘இந்திய சமாதானப் படையினர் எனது நாட்டின் மேல் ஆக்கிரமிப்பிற்காக வரவில்லை.

பதிலாக இலங்கை அரசின் அழைப்பின் நிமித்தம் வந்தார்கள்’ எனப் பதிலளித்தேன். உண்மையில் இப் பதில் எனது இதயத்திலிருந்து வரவில்லை. எனது நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசின் கௌரவத்தைக் காப்பாற்றவே அவ்வாறு கூறினேன்.

சில வருடங்களின் பின்னர் இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள ராணுவ பயிற்சிக் கல்லூரிக்குப் பயிற்சிக்காகச் சென்றிருந்தேன். அப்போது சமாதானப் படையில் செயலாற்றிய அதிகாரிகள் பலரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்தது. images

அவர்களின் அனுபவங்களில் கவலைகளே தொக்கி நின்றன. தம்மை மலர்மாலை போட்டு வரவேற்ற மக்கள் தமக்கு எதிராக திரும்பிய நிலமைகளையும், ஆரம்பத்தில் நட்பு பாராட்டிய புலிகள் பின்னர் பரம எதிரியாக மாறிய நிகழ்வுகளையும் பகிர்ந்தனர்.

புலிகளின் தலைவராக பிரபாகரன் இருக்கும் வரை தோற்கடிக்க முடியாது என அவர்களும் உறுதியாக நம்பியிருந்தார்கள். இலங்கை உள் விவகாரத்தில் இந்தியா ஒருபோதும் தலையிடாது என்றார்கள். அதுவே எனது பிரார்த்தனையாகவும் அமைந்தது.

சமாதானப் படையின் இறுதிப் பிரிவினர் தமிழ்நாட்டிற்குச் சென்ற போது அவர்களைத் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி வரவேற்க வேண்டுமென மத்திய அரசு கேட்ட போதிலும் அவர் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பினை உணர்த்தும் பொருட்டு அதில் கலந்து கொள்ள மறுத்திருந்தார்.

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.