ஆகாயத்தில் வெடித்துச் சிதறிய போர் விமானம் : அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய இரு விமானிகள்

0
151

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் போர் விமானமொன்று ஆகாயத்தில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணித்த இரு விமானிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சுகோவ்ஸ்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற மிக்-29 ரக போர் விமானம், விபத்துக்குள்ளாகி டிமிட்ரோஸ்கோவிய் எனும் கிராமத்திக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணம் செய்த விமானிகள் இருவரும் வெளியே குதித்து அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்களில் ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரட்டை இயந்திரங்களைக் கொண்ட மிக்-29 போர் விமானத்தின் ஒரு எஞ்சினில் தீப்பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.