மட்டக்குளியில் கொடூரம் : ஒரு குழந்தையின் தந்தை வெட்டிக் கொலை

0
229

கொழும்பு – 15, மட்டக்குளி சமித்புர பகுதியில் ஒரு குழந்தையின் தந்தையொருவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 மட்டக்குளி சிறிவிக்கிரமபுர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தையான உதயகுமார் என்பவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிவிக்கிரமபுர பகுதியில் வைத்து மரணித்தவரும் அவரது மனைவி, குழந்தையுடன் நேற்று இரவு 7.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது, முச்சக்கர வண்டியை இடைநிறுத்தி முச்சக்கர வண்டியினுள்ள நபர் ஒருவர் ஏறியுள்ளார்.

இதன்போது குறித்த நபருக்கும் சம்பத்தில் பலியான நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் கைக்கலப்பாகியதில் சந்தேகநபர் இவரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதன்போது காயங்களுக்குள்ளான நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் அளுத்கடை 6 ஆம் இலக்க நீதவான் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் மரண பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர் மரணித்தவருக்கு கடனாகப் பெற்ற 25 ஆயிரம் ரூபாவை திருப்பி வழங்கவேண்டியிருந்த நிலையில் அது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் இறுதியிலேயே இவ்வாறு கத்திகுத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை அடையாளங்கண்டுள்ள பொலிஸார் அவரை கைதுசெய்ய முயற்சித்த வேளையில் சந்தேகநபர் அப்பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.