ஹம்பாந்தோட்டையில் நொடிப் பொழுதில் பறிபோன தாயினதும், மகனதும் உயிர்

0
196

ஹம்பாந்தோட்டை –  குடகோடா பகுதியில் இன்று மாலை டிப்பர் வாகனமும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தாயும் மனும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

சூரியபொகுன கிராமத்தைச் சேர்ந்த தாயும் மகனுமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முச்சக்கரவண்டியானது கார் ஒன்றை முந்திச் செல்ல முயற்சித்த போதே எதிரே வந்த டிப்பர் வண்டியுடன் மோதியுள்ளது.

முச்சக்கரவண்டி டிப்பர் வண்டியுடன் மோதிய வேகத்தில் முச்சக்கரவண்டியினுள் இருந்த பெண் கீழே விழுந்தள்ளார்.

கீழே விழுந்த பெண்ணின் மீது டிப்பர் சில்லு ஏறியதாலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

விபத்தை தடுக்க தவறிய குற்றச்சாட்டின் பேரில் டிப்பர் வண்டி சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.