தாழை மரத்தில் தொங்கிய 13வயது சிறுமி! கொலையா? தற்கொலையா?

0
49

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போனமை தொடர்பாக குறித்த சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இது தற்கொலையா அல்லது கொலையா என, காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Thalai

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.