அதீத காதலினால் நேர்ந்த சோகம்: காதலியை பார்க்கச் சென்று துடிதுடிக்க உயிரை விட்ட இளைஞன்..

0
315

காலி-கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்க்பபட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞன் நேற்று அதிகாலை வீட்டின் ஜன்னல் ஒன்றை திறந்து விட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் மாலை வரை வீட்டிற்கு வராத காரணத்தினால், பெற்றோர் கரன்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பின்னர் பிரதேச மக்களுடன் இணைந்து பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது அவரது சடலம் காதலியின் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் மீட்கப்பட்டுள்ளது.

மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தப்படும் மின்சார கம்பியில் சிக்கியே நேற்று இரவு 7 மணியளவில் இவ்வாறு, உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் அப்பகுதியினரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.