2.0 திரைப்படத்தின் பிரம்மாண்டமான மேக்கிங் விடியோ வெளியானது- வீடியோ

0
218

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் மேக்கிங் விடியோவினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் இயக்குயர் ஷங்கர் இயக்கி வரும் திரைப்படம் 2.0

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் உருவாக்கப்படும் இத்திரைப்படத்தின் டீஸரினை படக்குழுவினர் கடந்த மாதம் 13-ஆம் வெளியிட்டு 2.0 பீவரினை ரசிகர்கள் மத்தியில் பரவ்விட்டனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோவின் 4-ஆம் பாகத்தினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் சுமார் 550 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் தயாராகும் படம் இதுதான். இந்த படத்திற்கு 3000 பேர் கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாக படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என்பது உறுதி.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.