சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு.

0
317

கிளிநொச்சி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், பொலிஸார் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக பூநகரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1469170524_download-10விபத்து இடம்பெற்றதற்கான எந்தவொரு அறிகுறிகளும் இல்லை எனவும் இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலையாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்ட பொலிஸார், தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி மாரியம்மன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய கதிரவேலு கபில்ராஜ் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

pasஇந்த அனர்த்தத்தில், பலத்த காயங்களுக்கு உள்ளாகிய பொலிஸார் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.