தாயின் சடலத்தின் மீது அமர்ந்து அகோரி பூஜை! திருச்சி மயானத்தில் பரபரப்பு

0
24647

அகோரி ஒருவர் தனது தாயின் சடலத்தின் மீது அமர்ந்து பூஜைகள் செய்ததால் அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள் திருச்சி மக்கள்.

திருச்சி அரியமங்கலம் அருகிலுள்ள உய்யங்கொண்டான் வாய்க்காலை ஒட்டிய பங்குகளில் “ஜெய் அகோராகாளி கோயில்” கட்டி பூஜை புனஸ்காரங்கள் செய்து வருபவர் அகோரி மணிகண்டன்.

இப்பகுதியில் பில்லி சூனியம், பேய் ஓட்டுதல், மாந்திரிக பூஜைகள் வாராவாரம் வெள்ளி, செவ்வாய் தினங்களிலும், அமாவாசை, பௌர்ணமி போன்ற முக்கிய தினங்களிலும் செய்து வருவது வழக்கம்.

இவர் காசியில் தான் அகோரியாக தீட்சை எடுத்துக்கொண்டதாகக் கூறிக்கொண்டு தனது சீடர்களுடன் இப்பகுதியில் கோயில் கட்டி பூஜைகள் நடத்தி வருகிறார்.

meri_11008இந்நிலையில் அகோரி மணிகண்டனின் தாயார் மேரி என்பவர் கடந்த 30-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.

அவரின் உடல் சொந்த ஊரான திருச்சி, மேல கல்கண்டார் கோட்டை, காமராஜர் தெருவிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மணிகண்டன் உருவாகியுள்ள மதநல்லிணக்க மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது

அகோரி மணிகண்டன் மற்றும் அவருடன் இருந்த அவரின் சீடர்கள் என அனைவரும் உடல் முழுக்க மயானத்துக்கு அந்தச் சாம்பலைப் பூசிக்கொண்டு பூஜைகள் செய்தனர்.

அலங்கரிக்கப்பட்ட சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி மணிகண்டன் அவரின் சீடர்களோடு மந்திரங்கள் மூலமாக ஆவேசமாய் முழங்கினர்.

அகோரி ஒருவர் தனது தாயின் உடல் மீது அமர்ந்து பூஜைகள் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.