இந்தோனேசியாவில் தொடர் நிலநடுக்கம்! – பரிதவிக்கும் மக்கள்

0
166

இந்தோனேசியாவில் சும்பா தீவு அருகே, இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எந்த வித தகவலும் வெளியாகவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலாவேசி தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவானது. இதன் தொடர்ச்சியாக கடற்கரை நகரமான பலுவில் சுனாமியும் ஏற்பட்டது.

இந்த இயற்கை பேரிடரினால் அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பெரும் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. இதில் 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 3லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை, மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இம்முறை, இந்தோனேசியாவில் உள்ள சும்பா தீவில் தெற்கு கடலோர பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டரில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இந்த தீவில் 7 லட்சத்து 50 ஆயிரம் வரை வசித்து வருகின்றனர். இந்நிலநடுக்கம் சம்பா தீவுக்கு 40 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

இதன் பின்னர் 15நிமிடம் கழித்து மீண்டுமொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது 6.0 என்று ரிக்டரில் பதிவாகியுள்ளது. உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்படைந்தவர்கள் குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.