குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர்: சிசிடிவி காட்சியின் வீடியோ வைரல்-

0
167

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நிதித்துறைச் செயலாளர் குவைத் அதிகாரியின் பர்ஸை திருடியது தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி வைரலாகி பாகிஸ்தானுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சமீபத்தில் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத் நாட்டு நிதித்துறைச் அதிகாரிகளும், பாகிஸ்தான் அதிகாரிகளும் கலந்துக் கொண்டார்கள். இருதரப்பு பேச்சுவார்த்தை அடுத்து, அனைவரும் விருந்துக்காக வெளியே சென்றனர்.

அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் நிதித்துறைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி ஜரார் ஹைதர் கான் அங்கும், இங்கும் பார்த்துவிட்டு யாரும் இல்லையென உறுதி செய்து, குவைத் நாட்டு அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது இருந்த பர்ஸை திருடி தனது கோட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்.

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவானது. ஆனால், அங்கு சிசிடிவி கேமிரா இருந்தது அந்த அதிகாரிக்கு தெரியவில்லை.

இதனையடுத்து சிலமணி நேரத்தில் தனது பர்ஸை காணவில்லை என்று குவைத் அதிகாரிகள் அங்கு தேடியுள்ளனர்.

பின்னர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியை பொருளாதார விவகார பிரிவு அதிகாரிகள் தேடினார்கள். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை.

இதனையடுத்து அதிகாரப்பூர்வமாக புகார் தெரிவிக்கப்பட்டதும் சோதனையை மேற்கொண்ட பாதுகாப்பு படையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது பர்ஸை திருடியது பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் அந்தஸ்தில் உள்ள ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

அவர் திருடிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் அவர் செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவும், அவமானமும் ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பான செய்தியையும், காட்சியையும் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான், சாமாடிவி போன்ற ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக பாகிஸ்தான் அரசு சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுதொடர்பான வீடியோ முகநூல், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வைரலாகி வரும்நிலையில், நெட்டிசன்கள் பாகிஸ்தான் அதிகாரியை அசிங்கப்படுத்தி வருகின்றன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.