நடிகரை இரவில் ஹோட்டல் அறைக்கு வரவழைத்து அறை வாங்கிய நடிகை

0
283

சென்னை: தொட்ரா படத்தில் நடித்தபோது வில்லன் நடிகர் நடிகையின் கன்னத்தில் ஓங்கி அறைவிட்ட சம்பவம் நடந்துள்ளது.

மதுராஜ் இயக்கத்தில் ப்ரித்விராஜன், வீணா உள்ளிட்டோர் நடிப்பில் அண்மையில் வெளியான படம் தொட்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்த போது நடிகை சூசனின் ஹோட்டல் அறைக்கு சென்று நடிகர் எம்.எஸ். குமார் அறைந்துள்ளார்.

அவர் ஏன் அப்படி செய்தார் என்ற விபரம் தெரிய வந்துள்ளது

தொட்ரா படத்தின் வில்லனான எம்.எஸ். குமாருக்கு மனைவியாக மைனா புகழ் சூசன் நடித்திருந்தார். ஒரு காட்சியில் குமார் சூசனை கன்னத்தில் ஓங்கி அறைய வேண்டும். பெண்களை விளையாட்டுக்காகக் கூட அடிக்கக் கூடாது என்று நினைப்பவராம் குமார். அப்படி இருக்கும்போது அவரை போய் சூசனை அறைய சொல்லியுள்ளனர்.

குமார் தன்னை அறைய மாட்டார் என்பதை புரிந்து கொண்ட சூசன் இயக்குனருக்கு போன் செய்து அவரை அழைத்துக் கொண்டு தனது ஹோட்டல் அறைக்கு வருமாறு கூறினாராம்.

இரவு 10 மணியாகிவிட்ட நிலையிலும் சூசன் அழைத்ததால் மதுராஜும், குமாரும் அவரின் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு சூசன் கூறியதை கேட்டு குமார் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தார்.

நீங்கள் என்னை நிஜமாகவே கன்னத்தில் அறைந்தால் தான் அந்த காட்சி நன்றாக வரும். அதனால் தற்போது என்னை ஓங்கி அறைந்து பயிற்சி எடுங்கள்.

அப்பொழுது தான் நாளை படப்பிடிப்பில் தயக்கம் இல்லாமல் அடிப்பீர்கள் என்றாராம் சூசன். வேண்டாம்மா என்று குமார் சொல்லியும் சூசன் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் குமார் பெயருக்கு அவரை அறைந்துள்ளார். இதை பார்த்த சூசன் கடுப்பாகியுள்ளார்.

நிஜமாக அறைந்தால் தான் இந்த அறையை விட்டு செல்ல முடியும் என்று சூசன் கூறியதை கேட்டு குமாருக்கு கோபம் வந்துவிட்டது. கோபத்தில் சூசனை ஓங்கி அறைந்துவிட்டார்.

அவர் அறைந்த வேகத்தில் கீழே விழுந்த சூசன் வலியையும் பொறுத்துக் கொண்டு கன்னத்தில் கை வைத்த படியே வந்து நாளையும் இப்படியே அறைய வேண்டும் சரியா என்றாராம்.

முதல் நாள் இரவு பயிற்சி எடுத்த போதிலும் மறுநாள் சூசனை உண்மையாகவே அறைய தயங்கியிருக்கிறார் குமார். அவர் டேக் வாங்தியதை பார்த்த சூசன் பயிற்சி செய்தும் இப்படி செய்கிறீர்களே என்று கேட்க குமாருக்கு மூக்கிற்கு மேல் கோபம் வந்து அவரை அடித்துள்ளார்.

அவர் அடித்ததில் சூசனின் கன்னம் வீங்கியதுடன், கம்மல் அறுந்து விழுந்துவிட்டதாம். என்ன ஒரு அர்ப்பணிப்பு சூசன். நல்லா வருவீங்க, வாழ்த்துக்கள்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.