வீடியோ கேமில் மூழ்கிக் கிடந்த தந்தை: குளியல் தொட்டிக்குள் துடிதுடித்து உயிர் விட்ட குழந்தை

0
289

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் 5 மாத குழந்தை இறந்துகிடக்க வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயது தந்தையொருவர், தனது 5 வயது மகனை குளியல் தொட்டிக்குள் வைத்துவிட்டு வீடியோ கேம் விளையாட சென்றுள்ளார்.

வீடியோ கேமில் ஆழ்ந்த கவனத்தில் இருந்த தந்தைக்கு, தனது குழந்தையை குளியல் தொட்டிக்குள் வைத்தோம் என்ற நியாபகம் வரவில்லை.

சில மணிநேரங்களின் பின்,  ஞாபகம் வந்தவுடன் வேகமாக சென்று பார்த்துள்ளார், குழந்தை சுயநினைவின்றி கிடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், வீட்டிற்கு வந்து பார்த்தபோது குழந்தை இறந்துகிடந்துள்ளது. விசாரணையில் இந்த சம்பவம் நடைபெற்ற போது தாய் வீட்டில் இல்லை.

மேலும் போலிஸாரின் விசாரனைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.